ஆண்ராயிடு N 7.0 இயங்குதளத்தின் மிகச்சிறந்த 9 வசதிகள்

வெகு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கும் அன்றொஇட் இயங்குதளம் 7.0-வின் மிகச்சிறந்த வசதிகளை பற்றிய ஒரு சிறப்பு பார்வை.

அண்மையில் அதிகாரபூர்வமாக வெளியாகி பெரிதும் வரவேற்று பெற்ற அன்றொஇட் 6.0 இயங்குதளத்தை விட மிகச்சிறந்த வசதிகளை நாம் அன்றொஇட் 7.0 இயங்குதளத்தில் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே வெளியாகி உள்ள டிவலபர் ப்ரீவீவ் பதிப்பின் படி, அன்றொஇட் 7.0 இயங்குதளம் கீழ்வரும் வசதிகளை கொண்டுள்ளது.

பரிந்துரைக்கப்படும் பதிவு



மல்டி டாஸ்க் வசதி

அன்றொஇட் 7.0 இயங்குத்தளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான செயலிகளை/ செட்டிங்க்ஸ்-களை இயக்க முடியும். புதிய பதிப்பில் காணப்படும் மிகச்சிறந்த  வசதிகளில் ஒன்றாக, இந்த மல்டி டாஸ்க் வசதி காணப்படுகிறது.



நோடிபிகேசன்-களுக்கு நேரடியாக பதிலளுக்கும் வசதி

அதாவது எமது போனில் நோடிபிகேசன்-களை கிளிக் செய்வதன் மூலம் குறித்த செயலி திறக்கப்பட்டும். ஆனால் புதிய அன்றொஇட் இயங்குதளத்தில் நோடிபிகேசன் பார்-இல் வைத்தே எமது பதில்களை தெரிவித்து கொள்ள முடியும்.


ரேம் பாவனையை கட்டுப்படுத்தும் புதிய வசதி.



வலது மற்றும் இடது பக்கங்களுக்கு நகர்த்த கூடிய வகையிலான நோடிபிகேசன் பார்.



நோடிபிகேசன்-களை ஒழுங்குபடுத்த உதவும் Bundled வசதி

இந்த வசதி மூலம் ஒரே செயலில் இருந்து தனித்தனி நோடிபிகேசன் வருவதை தடுத்து, அனைத்து நோடிபிகேசன்-களையும் ஒன்றாக பெற்றுக்கொள்ள முடியும்.



அன்றொஇட் பேட்டரி வாழ்க்கையை சேமிக்கும் வசதி

இந்த புதிய இயங்குதளம், அன்றொஇட் பேட்டரி வாழ்க்கையை சேமிக்கும் விதத்தில் காணப்படும் Doze தொழிநுட்பத்தில் மேலும் பல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது.

டேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் வசதி 

இந்த புதிய இயங்குதளத்தில் காணப்படும் மற்றுமொரு பயனுள்ள வசதியாக டேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் வசதியை குறிப்பிடலாம். உங்களது போனில் பின்புலத்தில் செயற்படும் டேட்டா, அதே போல் தானாக சின்க் ஆகி வீணடிக்கப்படும் டேட்டா போன்றவைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் அன்றொஇட் 7.0 இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Night Mode வசதி

Night Mode என்று அழைக்கப்படும் புதிய வசதி, உங்களது போனில் டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி உங்களது போனில் நேரத்தை அல்லது இடத்தை வைத்து டிஸ்ப்ளே வெளிச்சம் தானாக கட்டுப்படுத்தப்படும்.



போன் செட்டிங்க்ஸ் மெனு-வில் பல்வேறு தோற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள அதே வேலை, தேவையான முக்கிய செட்டிங்க்ஸ்-களை மிக இலகுவாக அச்செஸ் செய்யும் விதத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அன்றொஇட் 7.0 இயங்குதளத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் இருப்பதால், மேலும் பல்வேறு பயனுள்ள வசதிகள் இந்த இயங்குதளத்தில் சேர்த்து கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.