எமது போனில் இருக்கும் குறிப்பிட்ட பைல்-ஐ தொலைவில் இருக்கும் எமது நண்பர்களின் போனுக்கு நேரடியாக அனுப்புவது எப்படி?

ஸ்மார்ட் போன்களுக்கு இடையே தரவுகளை பரிமாரிகொள்வது பற்றிய பதிவொன்ருடன் இன்று உங்களை சந்திக்கிறேன். சாதாரணமாக எம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பைல்-ஐ எம்முடைய நண்பர் ஒருவருடைய ஸ்மார்ட் போனிற்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் ஒரு சேவை ப்ளூடூத் ஆகும்.

இன்று சந்தைக்கு அறிமுகமாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ப்ளூடூத் வசதி காணப்படுகிறது. ஆகவே எம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் ஏதேனும் ஒரு பைல்-ஐ எம்முடைய மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் ப்ளூடூத் வசதியை பயன்படுத்துகிறோம்.

குறிப்பிட்ட ஒரு பைல்-ஐ நாம் ப்ளூடூத் மூலம் மற்றைய போனுக்கு அனுப்ப வேண்டுமென்றால், குறித்த போன் நமது போனுக்கு அருகில் இருக்க வேண்டும். ஏனெறால் ப்ளூடூத் தொளினுட்பமானது குறிப்பிட்ட ஒரு தூர இடைவெளியிலேயே இரண்டு ஸ்மார்ட் போன்களை இணைக்க உதவும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு



ஆனால் குறிப்பிட்ட பைல்-ஐ நாம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் நண்பருடைய ஸ்மார்ட் போன் எமது ஸ்மார்ட் போனிற்கு அருகில் இல்லை என்றால், நமக்கு ப்ளூடூத் வசதி மூலம் எமது போனில் இருக்கும் பைல்-களை நம்முடைய நண்பரின் போனிற்கு அனுப்ப முடியாது.

இப்படியான ஒரு சூழலில் நாம் அடுத்து தெரிவு செய்வது மின்னஞ்சல் வசதி. ஆனால் மின்னஞ்சல் மூலமாக அனைத்து பைல்-களையும் அனுப்ப முடியாது என்பதும் அதே போல் மின்னஞ்சல் மூலம் குறிப்பிட்ட ஒரு அளவான பைல்-களை மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அன்றொஇட் சிறப்பு செயலியே Send Anywhere.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.

அதிலே Send என்று இருப்பதை கிளிக் செய்து நீங்கள் அனுப்ப நினைக்கும் பைல்-ஐ தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்த பின்னர்,

பரிந்துரைக்கப்படும் பதிவு

இப்போது உங்களுக்கு இந்த செயலியில் இருந்து ஒரு சிறப்பு இலக்க குறியீடு ஒன்று கிடைக்கும்.


குறிப்பு

இந்த செயலி மூலம் பைல்-களை பகிர்ந்து கொள்ள குறித்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் இந்த செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து உங்களது நண்பரின் போனில் இந்த செயலியில் காணப்படும் Receive என்பதை கிளிக் செய்து குறித்த இரகசிய இலக்கத்தை டைப் செய்ய சொல்லுங்கள்.


இப்போது உங்களது போனும் உங்களுடைய நண்பரின் போனும் குறித்த செயலி மூலம் இணைந்து விடும்.

அவசரத்தில் உதவும் இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிரக்கி கொள்ள முடியும்.

அன்றொஇட் சிறப்பு செயலி

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே இந்த முறையை பயன்படுத்தி மிகவும் அவசரமான நேரங்களில் மிக இலகுவாக உங்களுக்கு தேவையான பைல்-களை உங்களது நண்பரின் போனிற்கு அனுப்ப முடியும். குறித்த உபாயமானது போனில் இருக்கும் டேட்டா மூலம் தொழிட்படுவதால், இந்த உபாயத்தை மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் உபயோகியுங்கள்.