அண்மையில் பேஸ்புக் சமூக வலைத்தலமானது, தனது கோடிக்கணக்கான பயனர்களுக்கு தங்களது உணர்வுகளை பதிவுகளில் வெளிப்படுத்தும் விதமான பேஸ்புக் ரியாக்சன் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த வசதி மூலம், குறித்த ஒரு பதிவில், உங்களது மனதில் தோன்றும் உணர்வை வெளிப்படுத்த முடியுமாக இருக்கிறது.
கிட்டத்தட்ட இதே போன்றதொரு வசதியை வாட்ஸ்அப் நிறுவனமும் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது நீங்கள் உங்களது அன்புக்குரியவர் ஒருவருக்கு தகவல் ஒன்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் போது, குறித்த தகவலில் காணப்படும் மிக முக்கியமான வாசகங்களை குறிப்பிட்டு காட்டுவதற்கான BOLD வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
அத்துடன் சேர்த்து, ITALIC எனப்படும் வளைந்த வடிவிலான எழுத்துக்களை உங்களது வாட்ஸ்அப் தகவலில் சேர்த்து அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. பெரும்பாலும் இந்த வசதிகள் முதலாவதாக ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கே கிடைக்கும்.
ஏனென்றால், ஏற்கனவே ஆன்ராயிடு வாட்ஸ்அப் பேட்டா பதிப்பில் இந்த வசதிகள் சேர்க்கப்பட்டு பரிசீளிக்கபட்டு கொண்டிருக்கின்றன. ஆகவே அடுத்து வெளிவரவிருக்கும் வாட்ஸ்அப் இன் புதிய பதிப்பில் இந்த வசதிகள்
பெரும்பாலும் சேர்த்து கொள்ளப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
எமது தளத்ததில் ஏற்கனவே, வரும்காலத்தில் வாட்ஸ்அப்-இல் வரவிருக்கும் வசதிகளை இப்போதே வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம் மூலம் பெற்றுகொள்வது எப்படி என்ற பதிவை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
எதிர்வரும் நாட்களில் வாட்ஸ்அப்-இல் அறிமுகமாக இருக்கும் புதிய வசதிகளை இப்போதே உங்களது ஆன்றாயிடில் பெற்றுக்கொள்வது எப்படி?
ஆகவே இனி, உங்கள் அன்புக்குரியவருக்கு வாட்ஸ்அப்-இல் நீங்கள் மெசேஜ் மூலம் கூற முயற்சிக்கும் விடயத்தை இந்த புதிய வசதிகள் மூலம் உரத்து கூறலாம்.
