விண்டோஸ் 7, 8.1 மற்றும் விண்டோஸ் 10 கணனிகளில் விண்டோஸ் ஓடோ அப்டேட் மூலம் வீணடிக்கப்படும் டேட்டாவை சேமிப்பது எப்படி?

இன்று உலகில் பயன்படுத்தப்படும் கணனிகளில் 90% ஆனா கணனிகள் விண்டோஸ் இயங்குதளத்துடனேயே செயற்படுகின்றன. அனைத்து கணணி பாவனையாலர்களாலும் விரும்பி உபயோகிக்கப்படும் விண்டோஸ் இயங்குதளம் தனது பயனர்களுக்கு பல்வேறு பயனுள்ள வசதிகளை வழங்குகின்றது.

இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7, 8 மற்றும் விண்டோஸ் 10, உலகளாவிய ரீதியில் அனைத்து கணணி பாவனையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இலகுவான இயங்குமுறையுடன் பயனுள்ள பல வசதிகளை தரும் விண்டோஸ் இயங்குதளம் பற்றிய முக்கியமானதொரு பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சாதாரணமாக நாம் விண்டோஸ் இயங்குதளம் ஒன்றை எமது கணனியில் நிறுவி இருந்தால், குறிப்பிட்ட இயங்குதளம் எமது கணணி இணையத்துடன் இணையும் சந்தர்ப்பத்தில் அதற்கான புதிய அப்டெட்-களை பின்புலத்தில் இருந்து தரவிறக்கி கொண்டு இருக்கும்.


இவ்வாறு எமக்கு தெரியாமலேயே பின்புலத்தில் இருந்து தனக்கு தேவையான அனைத்து அப்டெட்-களையும் விண்டோஸ் தரவிறக்கி கொண்டு இருப்பதால், எமது டேட்டா தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே இந்த செயற்பாட்டை தடுப்பதால், எமது கணனியில் இருந்து உபயோகிக்கப்படும் டேட்டா சேமிக்கப்படும். ஆகவே சேமிக்கப்பட்ட டேட்டா-வை எமது வேறு ஏதேனும் தேவை ஒன்றிற்கு பயன்படுத்த முடியும்.

ஆகவே இன்றைய பதிவில் விண்டோஸ் கணனிகளில் எமக்கு தெரியாமலேயே பின்புலத்தில் தரவிறக்கப்பட்டு கொண்டிருக்கும் விண்டோஸ் அப்டேட்-களை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

விண்டோஸ் 7 கணனிகளின் விண்டோஸ் தானாக அப்டேட் ஆக்குவதை தடுப்பது எப்படி?

விண்டோஸ் கணனியில் Start-ஐ கிளிக் செய்து அங்கே Control Panel என்பதை ஆரம்பியுங்கள்.

அடுத்து அங்கே Windows Update என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து Change Settings என்பதை கிளிக் செய்து Never Check Update என்பதை தெரிவு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.



விண்டோஸ் 8 அல்லது 10 கணனிகளில் விண்டோஸ் தானாக அப்டேட் ஆக்குவதை தடுப்பது எப்படி?

விண்டோஸ் 10 சர்ச் பார்-இல் Services என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்போது விண்டோஸ் செர்விசெஸ் மெனு திறக்கப்படும். அதிலே Windows Update என்பதை தேடி பிடியுங்கள்.



அடுத்து விண்டோஸ் அப்டேட்-ஐ  டபுள் கிளிக் செய்து கீழே காட்டியிருப்பது போல் Disable என்பதை தெரிவு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


ஆகவே இனி உங்களது விண்டோஸ் கணணி தானாக அப்டேட் செய்து கொள்ளாது. இதன் மூலம் உங்களது கணனியில் இருந்து உங்களுக்கு தெரியாமல் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் டேட்டா சேமிக்கப்படும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

குறிப்பு 

விண்டோஸ் அப்டேட் ஆனது விண்டோஸ் கணனிகளுக்கு கட்டாயமான ஒன்றாகும். உங்களது விண்டோஸ் கணணி அப்டேட் செய்யப்பட்டு இருந்தால் தான் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் செயற்படும். ஆகவே விண்டோஸ் கணணி அப்டேட் செய்யப்படுவதையே நான் பரிந்துரைக்கிறேன்.

ஆனாலும் உங்களது டேட்டா பேக் மட்டுப்படுத்தப்பட்டது என்றால் விண்டோஸ் அப்டேட்-ஐ நிறுத்தி வைப்பது சிறந்தது.