பூமியில் இருக்கும் இடங்களை தேட கூகுள் மேப் போல வானத்தில் இருக்கும் இடங்களை தேட கூகுள் ஸ்கை மேப்

மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் இன்று உங்களை சந்திக்கின்றேன். இன்று நாம் எங்கு சென்றாலும் எம்முடன் கூடவே வந்து வழிகாட்டுவது கூகுள் மேப் ஆகும். புதிய இடங்களுக்கு செல்லும் போது, குறித்த இடத்துக்கான தூரம் எவ்வளவு, இதற்கான குறுக்கு வழிகள் என்ன என்பதையெல்லாம் எமது வழிகாட்டியாக இருந்து, எமது பயணத்தை இலகுபடுத்தும் மேப் பற்றியது தான் இன்றைய பதிவு.

ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது பூமியில் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ள உதவும் கூகுள் மேப் பற்றியதல்ல. வானத்தில் இருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், மற்றும் மேலும் பல வானியல் சம்மந்தப்பட்ட மேப் பற்றியது.


எமது தளத்தில் ஏற்கனவே இன்டர்நெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூகுள் மேப்-ஐ பயன்படுத்துவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

இன்டர்நெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி?

வானத்தில் இருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், மற்றும் மேலும் பல வானியல் சம்மந்தான விடயங்களுடன் இன்னும் பல பயனுள்ள வசதிகளையும் உள்ளடக்கி எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கு கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியே கீழ்வரும் ஸ்கை மேப் ஆகும்.
சரி.. இப்போது இந்த செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்று பார்ப்போம்.

எமது போனில் இருக்கும் ஜி.பி.எஸ் தொழிநுட்பம் மூலம், வானத்தில் இருக்கும் நட்ச்சத்திரங்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு கோள்களும் இருக்கும் திசையை ஆடோ மற்றும் மனுஅல் முறை மூலம் பார்த்து கொள்ள முடியும்.

டைம் ட்ரேவல் எனப்படும் வசதி மூலம், நாளைய தினம் நடக்கவிருக்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

இவை தவிர இன்னும் பல சிறந்த வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி.

கூகுள் ஸ்கை மேப் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

கூகுள் ஸ்கை மேப் -ஆன்ராயிடு செயலி
கூகுள் ஸ்கை மேப் - ஐபோன் செயலி

பூமியில் இருக்கும் இடங்களை தேட கூகுள் மேப் போல, இனி வானத்தில் இடங்களை தேட ஸ்கை மேப்...