எதிர்வரும் நாட்களில் வாட்ஸ்அப்-இல் அறிமுகமாக இருக்கும் புதிய வசதிகளை இப்போதே உங்களது ஆன்றாயிடில் பெற்றுக்கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் செயலியான வாட்ஸ்அப் தனது பலகோடி பயனர்களுக்காக அடிக்கடி பயனுள்ள பல வசதிகளை  வருகிறது. எமது தளத்திலும் வாட்ஸ்அப் சம்மந்தமான பதிவுகள் அடிக்கடி வந்து போயுள்ளன. அவற்றிலே சில சிறந்த பதிவுகளை கீழே பட்டியலிட்டு இருக்கிறேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளது என்று நினைத்தால், லின்க்கை கிளிக் செய்து வாசித்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனுக்கான வாட்ஸ்அப் புதிய பதிப்பில் அறிமுகமாக இருக்கும் சில மாற்றங்கள்

வாட்ஸ்அப்-இல் டாகுமெண்ட்ஸ் கோப்புக்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்

ஆகவே இன்றும் மற்றுமொரு புதிய வாட்ஸ்அப் செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன். வாட்ஸ்அப்-இல் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், எமது போனுக்கான வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்வதன் மூலம் குறித்த புதிய வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.


ஆனால் நீங்கள் ஆன்ராயிடு போன் ஒன்றை உபயோகிக்கிறீர்கள் என்றால், எதிர்வரும் நாட்களில் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாக இருக்கும் புதிய வசதிகளை இப்போதே பெற்றுக்கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் நிறுவனம் ஆன்ராயிடு போன்களுக்காக அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வாட்ஸ்அப் டெஸ்டர் வசதி மூலம் தற்போது வாட்ஸ்அப்-இல் பரிசீலை செய்து கொண்டிருக்கப்படும் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வசதி என்னவென்றால், வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய வாட்ஸ்அப் வசதிகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்த முன், அவற்றை சிறப்பு பதிப்பு ஒன்றின் மூலம் பரிசீலித்து பார்க்கும். அனைத்து வசதிகளும் சரியாக செயற்படுகிறது என்பதை உறுதி செய்த பின்னரே, வாட்ஸ்அப் புதிய பதிப்பை வெளியிடும்.

ஆகவே தற்போது பரிசீலையில் இருக்கும் வாட்ஸ்அப் பதிப்புக்களை உபயோகிக்கும் வசதியை ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு வழங்குகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

இதற்கு முன்னரும் இந்த வசதியை வாட்ஸ்அப் பயனர்களுக்கு வழங்கிய போதும், நேரடியாக இந்த வசதியை வழங்கவில்லை. ஆனால் தற்போது இந்த வசதியை நேரடியாக கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்தே வழங்குகிறது.

ஆகவே இந்த வசதியை உங்களது ஆன்ராயிடு போனிலும் பெற்றுக்கொள்ள நீங்கள் வாட்ஸ்அப் டெஸ்டர் ப்ரோக்ராம்-இல் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இணைந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் வாட்ஸ்அப் டெஸ்டர் ப்ரோக்ராம்-இல் இணையும் போது வாட்ஸ்அப் டெஸ்டர் பதிப்பை உங்களது போனிற்கு கூகுள் ப்லே ஸ்டோர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் டெஸ்டர் ப்ரோக்ராம்-இல் இணைவது எப்படி?

இந்த லின்க்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் டெஸ்டர் பக்கத்திற்கு செல்லுங்கள்.

அங்கே காணப்படும் Become a Tester என்பதை கிளிக் செய்யுங்கள்.




இப்போது நீங்கள் வாட்ஸ்அப் டெஸ்டர் ப்ரோக்ராம்-இல் இணைந்து விட்டீர்கள்.



இப்போது கூகுள் ப்லே ஸ்டோரில் உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்வதன் மூலம் வாட்ஸ்அப் டெஸ்டர் பதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

குறிப்பு 

நீங்கள் உபயோகிக்க போவது வாட்ஸ்அப் டெஸ்டர் பதிப்பு என்பதால், ஒரு சில எரர் வாசகங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் வாட்ஸ்அப் தனது புதிய வசதிகளை பரிசீலித்து கொண்டிருப்பதாகும். ஆகவே இந்த வாட்ஸ்அப் டெஸ்டர் பதிப்பில் பிழை செய்திகள் வருவது சாதாரண ஒரு விடயம்.

வாட்ஸ்அப் டெஸ்டர் பதிப்பில் இருந்து நீங்கள் நீங்க வேண்டுமென்றால், குறித்த வாட்ஸ்அப் பதிப்பை உங்களது போனில் இருந்து நீக்கி விட்டு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் வாட்ஸ்அப்-இன் அதிகார பூர்வ பதிப்பை நிறுவிக்கொள்ள முடியும்.