கஸ்டம் ரொம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஸ்டொக் ரொம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
ஸ்டொக் ரொம் என்றால் என்ன?
எமது ஆன்ராயிடு போனில் குறித்த ஒரு ஏதேனும் ஒரு ஆன்ராயிடு இயங்குதளம் காணப்படும். அத்துடன் குறித்த இயங்குதளம் எமது போனுக்கு தரும் சிறப்பு வசதிகளும் காணப்படும். இந்த வசதிகளுடன் கூடிய இயங்குதளத்தையே, நாம் ஆன்ராயிடு ஸ்டொக் ரொம் என்று அழைக்கிறோம்.
ஸ்டொக் ரொம் ஆனது, ஒரு குறிப்பிட்ட வரையறையை கொண்டது. இதுவரை உங்களது போன் ரூட் செய்யப்படாமல் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், போனில் தரப்பட்ட இயங்குதளத்துடன் செயற்பட்டு கொண்டு இருக்கிறது என்றால், உங்களுடைய போன் ஆன்ராயிடு ஸ்டொக் ரொம் உடன் இருக்கிறது என்று அர்த்தம்.
கஸ்டம் ரொம் என்றால் என்ன?
உங்களது போனில் காணப்படும் ஸ்டொக் ரொம்-ஐ மாற்றி உங்களது தேவைக்கு ஏற்ற போல, உங்களது ஆன்ராயிடு போனை மாற்றியமைத்தால், அதுவே கஸ்டம் ரொம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன என்பது இப்போது தெளிவாகி இருக்கும் என்று நினைக்கின்றேன்.
கஸ்டம் ரொம் ஒன்றை பயன்படுத்தும் போது, உங்களது போனிற்கு ஆன்ராயிடு நிறுவனம் தனது புதிய இயங்குதளமொன்றை அதிகாரபூர்வமாக வெளியிடாத போதும், உங்களால் குறித்த இயங்குதளத்தை உங்களது போனில் நிறுவ முடியும்.
ஆன்ராயிடு போனுக்கான கஸ்டம் ரொம் பல்வேறு மூன்றாம் தரப்பு தனிநபர்/ நிறுவனத்தால் டிவலப் செய்யப்படுகின்றன. அவற்றிலே சிறந்த 10 ஆன்ராயிடு கஸ்டம் ரொம்-களை கீழே பட்டியலிட்டு உள்ளேன்.
ஆன்ராயிடு போனுக்கு இதுவரை வெளியாகி இருக்கு கஸ்டம் ரொம்-களில் மிகச்சிறந்த கஸ்டம் ரொம் விபரங்கள்.
CyanogenMod கஸ்டம் ரொம்
ஆன்ராயிடு போன்களுக்கு வெளியாகி இருக்கும் கஸ்டம் ரொம்-களில், இது ஒரு சிறந்த ரொம் ஆகும். பல்வேறு வசதிகளை தரும் இந்த ரொம் அடிக்கடி சிறந்த பல அப்டேட்-களையும் தர தவறியதில்லை.
Paranoid கஸ்டம் ரொம்
உங்களது ஆன்ராயிடு போனின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றியமைக்க கூடிய இந்த ரொம், ஆன்ராயிடு பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு கஸ்டம் ரொம் ஆக காணப்படுகிறது.
இவை தவிர மேலும் சில சிறந்த ஆன்ராயிடு கஸ்டம் ரொம்-களை கீழே பட்டியலிடுகிறேன்.
Resurrection Remix கஸ்டம் ரொம்
Dirty Unicorns கஸ்டம் ரொம்
XenonHD கஸ்டம் ரொம்
BlissPop கஸ்டம் ரொம்
Omni-ரொம்
MIUI கஸ்டம் ரொம்
Carbon ரொம்
Liquid Smooth ரொம்
ஆனால் உங்களது போனிற்கு கஸ்டம் ரொம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டம் ரொம் ஒன்றை நிறுவுவதற்காக உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால், ஆன்ராயிடு போனுக்கான வாரண்டி இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

