போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தி கண்களை பாதுகாக்கும் Night Mode வசதியை அனைத்து ஆன்ராயிடு போன்களிலும் பெற்றுக்கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தும் நிறுவனங்கள், அவற்றிலே பல்வேறு வசதிகளை வழங்கி வருவது நாம் யாவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் நமது அன்றாட வாழ்வில் செய்து கொள்ள வேண்டிய பல்வேறு வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது. இதற்கு சிறந்த உதாரணங்களாக எமது ஸ்மார்ட் போனில் இருந்தபடியே ஆன்லைன் பொருட்கொள்வனவு செய்வது, மின்சார கட்டணங்களை செய்து கொள்வது என்று பல்வேறு உதாரணங்களை காட்டலாம்.

இவ்வாறு பல்வேறு பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள், அவற்றை பயன்படுத்தும் பயனர்களின் நன்மையையும் கருத்தில் கொள்ள தொடங்கி உள்ளது.

அதாவது அதிக நேரம் ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பதால், எமது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்திற்கொண்டு அன்ராயிடு மற்றும் ஐபோன் நிறுவனங்கள் தங்களுடைய இயங்குதளங்களில் புதிய பதிப்பில் in-build night mode வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது என்னவென்றால், எமது ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே-இல் இருந்து வெளியாகும் அதிகளவான வெளிச்சைத்தை எமது தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவதாகும்.


விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ள ஆன்ராயிடின் புதிய இயங்குதளமான ஆன்ராயிடு N 7.0 பதிப்பில் இந்த வசதி பல்வேறு மெருகூட்டல்களுடன் அறிமுகமாக உள்ளது.

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆனால் இந்த பயனுள்ள வசதி, தற்போது காணப்படும் குறிப்பிட்ட சில ஆன்ராயிடு இயங்குதளங்களில் இல்லை.

ஆகவே இந்த குறையை தீர்க்கும் முகமாக, அதிகளவான நேரம் எமது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது எமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கும் செயலியே கீழ்வரும் ட்விலைட்.
இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனில் ஆரம்பியுங்கள்.


இப்போது இந்த செயலியில் உங்களது போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தி கொள்வதற்கான பல்வேறு வசதிகள் காணப்படும்.


மேலும் இரவு நேரத்தில் எந்த அளவு வெளிச்சம் இருக்க வேண்டும், பகல் நேரத்தில் எந்த அளவு வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதை தானாகவும் மனுஅல் ஆகவும் கட்டுப்படுத்தும் வசதியை தருகிறது இந்த அருமையான செயலி.

அதுமட்டுமில்லாமல் மேலும் பல்வேறு வசதிகளை தரும் இந்த செயலியை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற வீடியோவையும் வழங்கி உள்ளார்கள் இந்த செயலியின் டிவலபர்கள்.

இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இன்றைய நவீன காலகட்டத்தில் எமது நேரத்தின் அதிகளவான பங்கு ஸ்மார்ட் போன்களிலேயே செலவிடப்படுவதால், கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுத்து கொள்ள உதவும் இந்த அருமையான செயலி, எமது ஸ்மார்ட் போனில் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டிய செயலியாகவே கருதப்படுகிறது.