விண்டோஸ் இயங்குதள DVD அல்லது Bootable பெண்டிரைவ் இல்லாமலேயே விண்டோஸ் இயங்குதளத்தை கணனியில் நிறுவுவது எப்படி?

விண்டோஸ் கணனிகளுடன் சம்மந்தப்பட்ட முக்கியமானதொரு விடயத்தை இன்றைய பதிவில் பார்ப்போம். விண்டோஸ் கணணிகளை உபயோகிக்கும் நாம், எமது கணணியை வைரஸ் தாக்குதல்களின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சில காரணத்தினாலோ போர்மட் செய்ய நேரிடலாம்.

ஆனால் உங்களது கணணியை போர்மட் செய்ய வேண்டுமென்றால், கட்டாயமான உங்களுடன் விண்டோஸ் இயங்குதள DVD இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் பெண் டிரைவ் மூலம் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவ, உங்களிடம் பெண்டிரைவ் ஒன்றாவது இருக்க வேண்டும்.


ஆகவே உங்களிடம் பெண் டிரைவ் அல்லது விண்டோஸ் இயங்குதள DVD இல்லாத சந்தர்ப்பமொன்றில் உங்களது கணனிக்கான விண்டோஸ் இயங்குதளத்தை எப்படி மிக இலகுவாக நிறுவி கொள்வது என்று பார்ப்போம்.

குறிப்பு

நீங்கள் நிறுவ நினைக்கும் விண்டோஸ் இயங்குதளத்தின் ISO பைல்-ஐ மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். அனைத்து விதமான விண்டோஸ் இயங்குதளத்தின் ISO பைல்-ஐ மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

கணனிகளுக்கான விண்டோஸ் இயங்குதளத்தை DVD அல்லது பெண் டிரைவ் என்று எதவுமே இல்லாமல் நேரடியாக கணனியில் இருந்தே நிறுவிக்கொள்ள கீழே வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு மென்பொருள் எமக்கு உதவுகிறது.
இந்த மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பியுங்கள்.


அதிலே New Installation என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் ISO Image என்பதை தெரிவு செய்து,


நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்துள்ள விண்டோஸ் ISO பைல்-ஐ தெரிவு செய்து Next என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவ நினைக்கும் இடத்தை தேவு செய்து, குறிப்பிட்ட மென்பொருளில் வரும் அறிவுறுத்தல்களின் படி விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுங்கள்.


ஆகவே மிக இலகுவாக விண்டோஸ் இயங்குதளத்தை DVD, பெண் டிரைவ் என்று எதுவுமே இல்லாமல் கணனியில் இருந்தே நேரடியாக நிறுவ உதவும் இந்த சிறப்பு மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

விண்டோஸ் இயங்குதள நிறுவல் சிறப்பு மென்பொருள்

ஆகவே இந்த முறை மூலம் மிக இலகுவாக உங்களது கணனிக்கான விண்டோஸ் இயங்குதளத்தை எது விதாமான DVD அல்லது பெண்டிரைவ் இல்லாமலேயே நிறுவி கொள்ள முடியும்.