ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும்.. - சிறப்பு பதிவு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று தான், ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? ரூட் செய்வது எப்படி? ரூட் சென்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதாகும்.

எமது பேஸ்புக் பேஜ் மூலமாக கூட பலபேர் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமாக கேட்டு இருந்தார்கள். ஆகவே அனைவரினது கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக இன்றைய பதிவில் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமான அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த பதிவில் ரூடிங் சம்மந்தமான கீழ்வரும் விடயங்களை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

  1. ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்ன?
  2. ரூட் செய்ய முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை.
  3. ரூட் செய்வது எப்படி?
  4. ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்வது எப்படி?
  5. ரூட் செய்த போனை அன் ரூட் செய்வது எப்படி?

ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?

இது குறித்தான சிறப்பு பதிவொன்றை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால் என்னவெல்லாம் செய்து கொள்ள முடியும். ரூட் செய்வதன் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்ற அனைத்து விதமான தகவல்களையும் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.


ரூட் செய்ய முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை.

அடுத்து, உங்களது போனை ரூட் செய்ய முன்னர், போனில் என்னவெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக பார்ப்போம்.

ஒரு சில ரூடிங் முறைகள் மூலம் உங்களது போனை ரூட் செய்வதால், உங்களது போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அனைத்து ரூடிங் முறைகளுக்கும் பொருத்தம் இல்லை. நான் எனது போனை ரூட் செய்யும் போது, எது விதமான டேட்டாகளும் அழியவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக ரூட் செய்ய முன்னர், உங்களது போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பாதுகாப்பனதாகும்.

ஆகவே உங்களுடைய போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் (செயலிகள் உட்பட) பேக்கப் எடுக்க கீழ்வரும் ஆன்ராயிடு சிறப்பு செயலியை பயன்படுத்துங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி

இந்த செயலி மூலம் அனைத்து பைல், டேட்டா, செயலிகள் என்பவற்றை பேக்கப் எடுத்து, அதை உங்களது மெமரி கார்டு-இல் அல்லது கணனியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.


போன் பேட்டரி சார்ஜ்-ஐ 80%-க்கு அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனை ரூட் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 15 நிமிடம் வரை எடுக்கும். ஆகவே ரூட் ப்ராசெஸ் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் உங்களது போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், சிஸ்டம் பைல்-களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களது போனில் குறைந்தது 80% ஆவது சார்ஜ் இருக்க வேண்டும்.

சாதாரண வேகத்துடன் கூடிய தடையில்லாத இன்டர்நெட் இணைப்பு

ரூட் செய்யும் போது சில சிஸ்டம் பைல் மோடிபிகேசன்-கள் நடைபெறும். ஆகவே இதை செய்து கொள்ள உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் குறித்த இன்டர்நெட் இணைப்பு தடையில்லாமல் தொடர்ந்து செயட்படகூடிய இன்டர்நெட் இணைப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் ரூட் ப்ராசெஸ் நடைபெறும் போது சிஸ்டம் எரர்-கள் வரும் வாய்ப்பு குறைவடையும்.

கணணி மூலமா ரூட் செய்ய போகிறீர்கள்?

உங்களது போனை போனில் இருந்த படியே ரூட் செய்வது தான் சிறந்ததாகும். இவ்வாறு போனில் இருந்தே செய்வதால், ரூட் ப்ராசெஸ் நடக்கும் போது பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அப்படியில்லாமல் கணனியில் இருந்து ரூட் செய்ய போகிறீர்கள் என்றால், உங்களது போனுக்கு தேவையான சரியான ட்ரைவர்ஸ் என்பவற்றை நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்துடன் உங்களது கணனியில் நிறுவி இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் நிறுத்தி வையுங்கள்.

ரூட் செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் என்ன செய்வது?

ரூட் செய்யும் போது சிஸ்டம் அளவில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், எம்மால் எதுவுமே செய்ய முடியாது. அவ்வாறான சூழ்நிலை ஒன்றில், உங்களது போனை கஸ்டமர் சர்வீஸ் செண்டர் ஒன்றிற்கு எடுத்து சென்றே திருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியல்லாமல், ரூட் செய்யமுடியவில்லை. ரூட் எரர் என்ற செய்திகள் வருமேயானால், உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் போனை பழைய நிலைக்கு திரும்ப பெற்று கொள்ள முடியும்.

சரி.. இப்போது முக்கியமான பகுதிக்கு வருவோம்..

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி?

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி என்பது பற்றிய இரண்டு சிறப்பு பதிவுகளை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அதிலே வெறும் 5 நிமிடத்திற்குள் ஆன்ராயிடு போனை மிக இலகுவாக போனில் இருந்தே ரூட் செய்து கொள்ளும் முறை, பெரும்பாலான ஆன்ராயிடு டிவைஸ்-களை வெற்றிகரமாக ரூட் செய்ய உதவியது. அந்த சிறப்பு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று உங்களது போனிற்கு பெற்று கொள்ளுங்கள்.
குறித்த ரூடிங் சிறப்பு செயலியை போனுக்கு தரவிறக்குவது எப்படி? மற்றும் குறித்த செயலியை பயன்படுத்தி மிக இலகுவாக ரூட் செய்து கொள்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு அடுத்த படியாக சிறந்த ரூடிங் செயலிகளாக கீழ்வரும் செயலிகளை குறிப்பிடலாம்.

ரூட் ஜீனியஸ்
ஐ ரூட்

அது தவிர, மேலும் 12 சிறப்பு ஆன்ராயிடு ரூடிங் செயலிகள் பற்றிய சிறப்பு பதிவொன்றை எழுதி இருந்தேன். ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள முறை மூலம் உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்ய முடியவில்லை என்றால், கீழ் குறிப்பிட்டுள்ள 12 சிறப்பு ஆன்ராயிடு ரூடிங் செயலிகள் மூலம் முயற்சித்து பாருங்கள்.

ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வது எப்படி?

பெரும்பாலும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டதும் குறித்த செயலியில், ரூட் சரியாக செய்யப்பட்டது என்ற வாசகம் தோன்றும். அது தவிர, கீழ்வரும் சிறப்பு செயலி மூலம் கூட உங்களது ஆன்ராயிடு போன் சரியாக ரூட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள .முடியும்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி


அன்-ரூட் செய்வது எப்படி?

சரி.. இறுதியாக என்னுடைய போனுக்கு ரூட் தேவையில்லை என்று நினைப்பவர்கள் எப்படி ரூட்-ஐ இல்லாமல் செய்து கொள்வது என்று பார்ப்போம்.

ரூட் செய்த ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை மிக இலகுவாக அன்ரூட் செய்து கொள்வது எப்படி என்பது பற்றிய சிறப்பு பதிவொன்றை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த பதிவில் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமான உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டேன் என்று நினைக்கின்றேன். மேலே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி உங்களது ஆன்ராயிடு போனையும் மிக இலகுவாக ரூட் செய்திடுங்கள்.