இனி ஆன்ராயிடு போனில் கேம்ஸ்-களை இன்ஸ்டால் செய்யாமலேயே விளையாட முடியும்.

பல்வேறு பயனுள்ள வசதிகளுடன் அறிமுகமாகும் இன்றைய ஸ்மார்ட் போன்களை நாம் வாங்கும் போது கவனிக்கும் ஒரு முக்கிய விடயம் தான் குறித்த ஸ்மார்ட் போனில் என்ன வகையான கேம்ஸ்-களை எம்மால் விளையாடிக்கொள்ள முடியும் என்பதாகும்.

சிறுவர் முதல் பெரியோர் என்று அனைவருமே ஸ்மார்ட் போன்களில் கேம்ஸ்-களை விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ற வகையான அதிசிறந்த, அதே போல் விளையாடுபவரை மீண்டும் மீண்டும் விளையாட சொல்லும் வகையான கேம்ஸ்-கள், தினம்தோறும் கேம்ஸ் டிவலபர்களால் வடிவமைக்கப்பட்டு கூகுள் ப்லே ஸ்டோர் அல்லது ஆப்பிள் அப் ஸ்டோரில் அப்லோட் செய்யப்படுகின்றன.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இவ்வாறு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் லட்ச்சக்கணக்கான கேம்ஸ்-களில் நாம் சிறந்ததாக இருக்கும் என்று  நினைத்து ஒரு சில கேம்ஸ்-களை எமது ஸ்மார்ட் போனில் நிறுவுவோம். ஆனால் நிறுவிய பின் குறித்த கேம்-ஐ விளையாட ஆரம்பித்ததும், ஏன் தான் இந்த கேம்-ஐ இன்ஸ்டால் செய்தோம் என்று தோறும் அளவுக்கு குறித்த கேம் காணப்படும்.

இந்த மாதிரியான கசப்பான அனுபவத்தை நாம் ஓவ்வொருவரும் கண்டிப்பாக சந்தித்து இருப்போம்.


ஆனால் இனி இவ்வாறான ஒரு கசப்பான அனுபவத்தை சந்திக்க தேவையில்லை. கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய வசதி ஒன்றில், எமது ஸ்மார்ட் போனிற்கு குறித்த கேம்-ஐ இன்ஸ்டால் செய்யாமலேயே விளையாடி பார்க்க முடியும்.

உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவ நினைக்கும் குறிப்பிட்ட கேம் ஒன்றை கூகுள் சர்ச்-இல் தேடுவதன் மூலம், குறித்த கேம்-ஐ போனில் நிறுவாமல் 10 நிமிடம் வரை விளையாடி பார்ப்பதற்கான Try Now வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக நாம் குறித்த மென்பொருள் ஒன்றின் ட்ரைல் பதிப்பை உபயோகித்து பார்த்த பிறகு, பயனுள்ளது என்று நினைத்தால் அதை பணம் செலுத்தி வாங்குவோம். அதில் எந்த பயனும் இல்லை என்றால், குறித்த மென்பொருளை நீக்கி விடுவோம். இதே மாதிரியான ஒரு முறையை தான் கூகுள் அன்றொஇட் போனுக்கான கேம்ஸ்-களில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே இந்த பயனுள்ள வசதி மூலம் குறிப்பிட்ட கேம்-ஐ எமது ஸ்மார்ட் போனில் நிறுவாமலேயே எம்மால் விளையாடிப்பார்க்க முடியும். அதன் பின்னர், குறித்த கேம் உண்மையிலேயே உங்களுக்கு பிடித்து இருந்தால், அதை உங்களது போனிற்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.

இந்த பயனுள்ள வசதி மூலம், கேம்ஸ்-களை நிறுவும் போது உங்களது போனில் வீணடிக்கப்படும் டேட்டா பாரிய அளவில் சேமிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.