ஆண்ராடிடு மற்றும் ஐபோனில் இருக்கும் முக்கியமான போட்டோகளை கூகுள் போடோஸ்-இற்கு அப்லோட் செய்து பாதுகாப்பது எப்படி?

ஸ்மார்ட் போன்களில் நாம் அதிகமாக உபயோகிக்கும் ஒரு வசதி தான் கேமரா. எமது அன்றாட வாழ்வில் நடைபெறும் அனைத்து விதமான நினைவுகளையும் மீட்டு பார்க்க எமது ஸ்மார்ட் போன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் உதவுகின்றன.

அதிலும் இன்றைய காலத்தில், ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்குவது என்றாலே, நாம் முதலில் அவதானிக்கும் ஒரு விடயம் குறித்த போனில் கேமரா தரம் என்ன என்பது தான். அந்த அளவுக்கு போட்டோ மற்றும் செல்பி மோகம் நம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆகவே எமது இன்றைய பதிவில், எமது ஸ்மார்ட் போன்களில் நாம் சேமித்து வைக்கும் புகைப்படங்கள் பற்றி முக்கியமான விடயமொன்றை பார்க்க போகிறோம்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

எமது முன்னைய நினைவுகளாக நாம் எமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள், குறித்த ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்து போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே இவ்வாறன சூழ்நிலைகளை தவிர்த்து கொள்ளும் விதமாக எமது முக்கியமான போடோகளை எம்முடைய கூகுள் கணக்கிற்கு கூகுள் போடோஸ் எனப்படும் செயலி மூலம் எப்படி சேமித்து வைப்பது என்று பார்ப்போம்.


இந்த வசதியை எமது ஸ்மார்ட் போனில் செயட்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் எமக்கு கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.

கூகுள் கணக்கில் போடோகளை சேமிப்பதால், எமது முக்கியமான போட்டோகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

கூகுள் கணக்கிற்கு போடோகளை அப்லோட் செய்த பின்னர், குறித்த போடோகளை அழித்து விடலாம். ஆகவே எமது போனில் மெமரி சேமிக்கப்படும்.

வேறு ஒரு ஸ்மார்ட் போனில் இருந்து கூட, எமது கூகுள் கணக்கிற்கு நுழைவதன் மூலம் குறித்த போட்டோ களை பார்க்க கூடியதாய் இருக்கும்.

ஆகவே இவ்வாறு பல்வேறு வசதிகளை தரும் கூகுள் போடோஸ் செயலியை எமது ஸ்மார்ட் போனில் எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.

முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது அன்றொஇட் மற்றும் ஐபோனுக்கான கூகுள் போடோஸ் செயலியை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.

அதிலே செட்டிங்க்ஸ்-இற்கு சென்று அங்கே Photos என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய போனில் இருக்கும் அனைத்து போட்டோகளையும் பார்க்க முடியும்.


அடுத்து செட்டிங்க்ஸ்-இற்கு சென்று உங்களுடைய போனில் இருக்கும் அனைத்து போட்டோகளும் கூகுள் கணக்கிற்கு அப்லோட் செய்யப்பட வேண்டுமா அல்லது குறித்த போட்டோகள் மட்டும் அப்லோட் செய்யப்பட வேண்டுமா, டேட்டா மூலமாகவா அல்லது வைபை மூலமாக என்று பல்வேறு தெரிவுகளை மேற்கொள்ளும் வசதியை தருகிறது இந்த அருமையான செயலி.


மேலும் உங்களுடைய கூகுள் கணக்கிற்கு போனில் இருக்கும் குறித்த போட்டோ அதே தரத்தில் அப்லோட் செய்யப்படவேண்டுமா அல்லது போடோவின் தரத்தை கூகுள் தீர்மானிக்கட்டுமா என்ற தெரிவுகளையும் செய்து கொள்ள முடியும்.


இவை தவிர இன்னும் பல வசதிகள் இந்த செயளியில் காணப்படுகின்றது. குறித்த செயலியை நிறுவிய பின்னர், அதனுடைய செட்டிங்ஸ்-ஐ ஒரு முறை வலம் வாருங்கள். அப்போது உங்களால் இந்த செயலி வழங்கும் அனைத்து வசதிகளை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் போடோஸ் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது அன்றொஇட் மற்றும் ஐபோனிற்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

கூகிள் போடோஸ் ஐபோன்
கூகுள் போடோஸ் அன்றொஇட்

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே இந்த அருமையான செயலியை பயன்படுத்தி உங்களது முக்கியமான போட்டோகளை கூகுள் கணக்கில் வைத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.