வாட்ஸ்அப்-இல் 2 GB அளவு வரையான மீடியா பைல்-களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

இன்று ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர், அதிகமாக பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப் ஆகும். ஆகவே எமது தளத்திலும் வாட்ஸ்அப் சம்மந்தாமான பதிவுகள் அடிக்கடி வந்து போயுள்ளன. அவற்றிலே சில சிறந்த பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளது என்று நினைத்தால், குறித்த லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் நண்பரின் வாட்ஸ் அப் மெசேஜ்-களை அவருக்கு தெரியாமல் பார்ப்பது எப்படி?

எதிர்வரும் நாட்களில் வாட்ஸ்அப்-இல் அறிமுகமாக இருக்கும் புதிய வசதிகளை இப்போதே உங்களது ஆன்றாயிடில் பெற்றுக்கொள்வது எப்படி?

வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுப்பது எப்படி?

வாட்ஸ்அப்-ல் ஒரு போட்டோக்குள் இன்னுமொரு போட்டோவை மறைத்து அனுப்புவது எப்படி?

ஆகவே இன்றும் மற்றுமொரு வாட்ஸ்அப் சம்மந்தமான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். அதாவது வாட்ஸ்அப்-இல் எம்மால் 16 MB அளவான மீடியா பைல்-களை மட்டுமே எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதை விட பெரிய அளவிலான பைல்-களை வாட்ஸ்அப்-இல் பகிர, வாட்ஸ்அப் எமக்கு அனுமதியளிக்கவில்லை.


ஆனால் இன்றைய பதிவில் வாட்ஸ்அப் டேட்டா பேஸ் பைல்-ஐ ஹேக் செய்வதன் மூலம் வாட்ஸ்அப்-இல் 2 GB அளவு வரையான பைல்-களை மிக இலகுவாக எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி என்று கூறுகிறேன்.

அதற்கு முன், இந்த இரண்டு விடயங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

1. இதை ஆன்ராயிடு போன் மூலமாக மட்டுமே செய்ய முடியும்.

2. உங்களது ஆன்ராயிடு போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆன்ராயிடு ரூட் என்றால் என்ன? இதை செய்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதை பற்றிய பதிவுகள் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டன. ஆகவே உங்களது ஆன்ராயிடு போன் இன்னும் ரூட் செய்யப்படவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?

அன்ராயிடு போனை ரூட் செய்வதற்கான 12 சிறந்த செயலிகள்

சரி... இப்போது கீழே வழங்கப்பட்டிருக்கும், வாட்ஸ் அப் மீடியா பைல்-ஐ ஹேக் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, ரூட் அனுமதியை வழங்குங்கள்.

அடுத்து இந்த செயலியில் Data என்று இருப்பதை டபுள் கிளிக் செய்யுங்கள்.


திறக்கும் திரையிலும் மற்றுமொரு Data என்ற பைல் காணப்படும். அதையும் டபுள் கிளிக் செய்து திறவுங்கள்.

அதிலே com.whatsapp என்று இருப்பதை கிளிக் செய்து திறவுங்கள். (பெரும்பாலும் இது கடைசியில் இருக்கும்.)


அடுத்து shared_prefs என்ற பைல் -ஐ திறவுங்கள்.


அங்கே கீழே படத்தில் காட்டப்பட்டிருக்கும் பைல்-ஐ,


text editor ஒன்றுடன் திறவுங்கள்.

பரிந்துரைக்கப்படும் பதிவு


அதிலே media_limit_mb என்பது, 16 என்று இருக்கும். அதை 2048 என்று மாற்றி விட்டு, மேலே சேமிப்பதற்கான ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது போனில் ரன் ஆகி கொண்டிருக்கும் அனைத்து பைல்ஸ் மற்றும் செயலிகளை மூடி விட்டு, மறுபடியும் வாட்ஸ்அப்-ஐ திறந்து 16 MB-க்கு அதிகமான மீடியா பைல் ஒன்றை உங்களது நண்பருக்கு அனுப்ப முயற்சியுங்கள்.


கண்டிப்பாக 16 MB க்கு அதிகமான குறித்த மீடியா பைல்-ஐ மிக இலகுவாக அனுப்ப கூடியதாய் இருக்கும்.

இதோ நான் மேலே படத்தில் காட்டியுள்ள ஆதாரத்தை பாருங்கள். 400 MB அளவான திரைப்படம் ஒன்றை மிக இலகுவாக வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடியதாய் இருக்கிறது.

ஆகவே மிக இலகுவாக வாட்ஸ்அப் மீடியா பைல்-ஐ ஹேக் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி

பரிந்துரைக்கப்படும் பதிவு

குறிப்பு

இந்த வாட்ஸ்அப் மீடியா ஹேக் உபாயமானது, எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் செயட்படக்கூடிய ஒரு உபாயம் ஆகும். இருந்த போதிலும் இது ஒரு வாட்ஸ்அப் ஹேக் என்பதால், இதை உங்களது போனில் செய்யும் போது ஏதேனும் பிழைகள் வந்தால், அதற்கு நான் பொறுப்பு அல்ல.

இந்த ஹேக் உபாயம் எப்படி சிறப்பாக செயற்படுகிறது என்பதை மேலே ஸ்க்ரீன் ஷாட்-களுடன் ஆதாரமாக காட்டியுள்ளேன். ஆகவே நீங்களும் முயற்சித்து பாருங்கள்.