கணணி அல்லது ஸ்மார்ட் போன்களில் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்திலும் இன்டர்நெட்-ஐ உபயோகிப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் மற்றும் கணணிகளை வைத்து இருக்கும் அனைவருமே இணையத்தை உபயோகிக்க தவறியதில்லை. இன்னும் சொல்ல போனால், இணையத்தை உபயோகிப்பதட்காகவே இன்று ஸ்மார்ட் போன்களையும் கணணிகளையும் நாம் வைத்துள்ளோம்.

எமது தளத்திலும் இணையம் சம்மந்தமான பதிவுகள் பல எழுதப்பட்டுள்ளன. அவற்றிலே சில முக்கியமான பதிவுகளை கீழே வழங்கியுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைத்தால், கீழிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

அதிவேக DNS மற்றும் IPv6 மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

உங்களது கல்லூரியில் அல்லது அலுவலகத்தில் ப்லோக் செய்த தளங்களை எப்படி அச்செஸ் செய்வது?

ஆகவே இன்றும் இணையத்துடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பயனுள்ள விடயத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.


அதாவது நாம் இணையத்தில் இருக்கும் தளங்களுக்கு செல்ல பெரும்பாலும் கூகுள் க்ரோம் உலாவியையே பயன்படுத்துகிறோம். பலகோடி இணைய பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் க்ரோம் உலாவி தமது பயனர்களின் நன்மையை கருத்திற்கொண்டு மிகச்சிறந்த வசதிகளை தினம்தோறும் அறிமுகப்படுத்தி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கூகுள் க்ரோம் உலாவியில் காணப்படும் மிக முக்கியமானதொரு வசதியை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

அதாவது, கூகுள் க்ரோம் மூலம் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் ஏற்கனவே அச்செஸ் செய்த அனைத்து தளங்களையும் அச்செஸ் செய்யும் வசதியை தருகிறது கூகுள் க்ரோம்.

இந்த வசதியை செயற்படுத்த உங்களது கணணி அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கும் கூகுள் க் ரோம் உலாவியை திறவுங்கள்.

அடுத்து chrome://flags என்று டைப் செய்து குறித்த பேஜ்-இற்கு செல்லுங்கள்.


திறக்கும் விண்டோ-வில் Show Saved Copy Button என்று இருக்கும் செட்டிங்க்ஸ்-ஐ தேடிப்பிடியுங்கள்.

இதை Ctrl + F-ஐ அழுத்தி திறக்கும் பாக்ஸ்-இல் டைப் செய்வதால் மிக இலகுவாக தேடிக்கொள்ள முடியும்.


இதனது செட்டிங்க்ஸ்-ஐ Enable: Primary என்பதிற்கு மாற்றுங்கள்.

அடுத்து Relaunch Now என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.



இப்போது உங்களது கூகுள் க்ரோம் உலாவி ஒரு முறை மூடப்பட்டு மறுபடியும் திறக்கப்படும்.

இப்போதிலிருந்து நீங்கள் கூகுள் க்ரோம் மூலம் செல்லும் அனைத்து தளங்களும் க்ரோம் உலாவியில் தற்காலிகமாக சேமிக்கப்படும்.

உங்களது கணனியில் அல்லது ஸ்மார்ட் போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பமொன்றில், உங்களுக்கு விருப்பமான குறித்த தளம் ஒன்றை க்ரோம் மூலம் திறக்கும் போது கீழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும். அங்கே காணப்படும் Show Saved Copy என்பதை கிளிக் செய்தால் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறித்த தளம், உங்களது உலாவியில் திறக்கப்படும்.


ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது க்ரோம் உலாவியில் இருந்து ஏற்கனவே அச்செஸ் செய்த அனைத்து தளங்களையும் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் கூட அச்செஸ் செய்ய முடியும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இந்த உபாயம் மூலம் குறித்த தளத்தில் இருக்கும் புதிய அனைத்து பக்கங்களையும் பார்க்க முடியாவிட்டாலும், நீங்கள் ஏற்கனவே பார்த்த அனைத்து பக்கங்களையும் மறுபடியும் பார்க்க முடியும். இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் உதவக்கூடிய இந்த உபாயம் உங்களது கூகுள் க்ரோம் உலாவியில் கட்டாயம் செயற்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.