ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவரும் பெரும்பாலானோரால் மிகவும் விரும்பி பாவிக்கப்பட்டு வரும் வாட்ஸ்அப் மெசஞ்சர்-இல் இருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சினை, நாம் குறித்த ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ வாசித்த பின்னர் தோன்றும் நீல நிற டிக்.
இதை பற்றி பெரிதாக ஒரு விளக்கமும் தர தேவையில்லை என்று நினைக்கிறேன். எமது நண்பர் ஒருவர், எமக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் ஒன்றை அனுப்பும்போது குறித்த மெசேஜ்-ஐ நாம் படித்து முடித்ததும், குறித்த மெசேஜ் படிக்கப்பட்டு விட்டதாக அனுப்பியவருக்கு தெரிவிப்பதே நீல நிற டிக் ஆகும்.
வாட்ஸ்அப்-இல் இருக்கும் வசதிகளில் மிகச்சிறந்த ஒரு வசதியாக கருதப்படும் இந்த நீல நிற டிக் வசதி, சில சமயம் எமக்கு தொல்லை தரும் ஒரு வசதியாகவே பார்க்கபடுகிறது.
குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால், நாம் ஒருவருடைய மெசேஜ்-ஐ படித்து முடித்த பிறகும், அது அனுப்பியவருக்கு தெரியக்கூடாது என்ற ஒரு நிலை தோன்றலாம்.
அவ்வாறான சூழ்நிலை ஒன்று வரும் போது, வாட்ஸ்அப்-இல் உங்களால் மெசேஜ் படித்து முடிந்ததும் தோன்றும் நீல நிற டிக்கை மறைப்பது எப்படி, அல்லது நீல நிற டிக் தோன்றாமல் மெசேஜ்-ஐ படிப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த வேலையை மிக இலகுவாக கீழ்வரும் இரண்டு முறைகள் மூலம் செய்து கொள்ள முடியும்.
1 - உங்களது போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவதன் மூலம்.
2 - உங்களது போனில் இருக்கும் Flight Mode எனப்படும் வசதி மூலம்.
சரி.. மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை எப்படி செயற்படுத்துவது என்று விளக்கமாக பார்ப்போம்.
முதலாவது முறையை பயன்படுத்தி, அதாவது உங்களது போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப் மெசேஜ் படிக்கப்பட்டதும் தோன்றும் நீல நிற டிக்கை மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த உபாயத்தை உங்களது போனில் செயற்படுத்தி கொள்வது எப்படி என்பது பற்றிய சிறப்பு பதிவொன்றை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த பதிவை கீலே வலங்கப்பட்டிருக்கும் இனைப்பில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
உங்களது போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவது எப்படி?
சரி.. இப்போது இரண்டாவது முறையை பயன்படுத்தி வாட்ஸ் அப் இல் நீல நிற டிக் தோன்றாமல் மெசேஜ்-ஐ வாசிப்பது எப்படி என்று பார்ப்போம்.
வாட்ஸ்அப்-இல் குறித்த ஒரு மெசேஜ் வந்ததும் உங்களது போனில் இருக்கும் Flight Mode வசதியை செயட்படுத்துங்கள். இவ்வாறு செய்வதால், உங்களது போனிட்கும் மொபைல் நெட்வொர்க்-இற்கும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
ஆகவே இந்த வசதியை செயற்படுத்திய பின்னர், குறித்த மெசேஜ்-ஐ வாட்ஸ்அப்-இல் திறந்து வாசியுங்கள். மெசேஜ்-ஐ வாசித்து முடித்ததும், மறுபடியும் வாட்ஸ்அப்-ஐ மூடி விட்டு Flight Mode வசதியை துண்டியுங்கள்.
இந்த முறை மூலம் வாட்ஸ்அப் மெசேஜ்களை வாசித்தால், மெசேஜ்-ஐ அனுப்பியவருக்கு நீல நிற டிக் காட்டப்பட மாட்டது. ஆகவே குறித்த நபர், நீங்கள் இன்னும் அவருடைய மெசேஜ்-ஐ வாசிக்கவில்லை என்று நினைத்து கொண்டு இருப்பார்.
ஆனால் மறுபடியும் நீங்கள் வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் சென்றால் குறித்த நபருக்கு மெசேஜ் படிக்கப்பட்டு விட்டதாக நீல நிற டிக் சென்று விடும்.
ஆகவே Incognito Mode-ஐ செயற்படுத்தி வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ வாசிக்க நீங்கள், இரண்டாவது முறையில் குறிப்பிட்டுள்ளவாறு மொபைல் நெட்வொர்க்-ஐ Off செய்ய தேவையில்லை. ஆகவே மொபைல் நெட்வொர்க்-ஐ நிறுத்தாமல் வாட்ஸ்அப் மெசேஜ் படிக்கப்பட்டதும் தோன்றும் நீல நிற டிக்கை மறைக்க நினைப்பவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள Incognito Mode உபாயம் மிகவும் சிறந்ததாக அமையும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
WhatsApp
வாட்ஸ்அப் மெசேஜ் படிக்கப்பட்டதாக வரும் நீல நிற டிக்கை மறைப்பது எப்படி?
