பேஸ்புக்-ல் இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு ஓட்டை.. நீங்கள் மறைத்து வைத்து இருக்கும் போன் நம்பர்-களை மற்றவர்களால் பார்க்க முடியும்.

பேஸ்புக் தளத்தின் காணப்படும் மிகப்பெரியதொரு பாதுகாப்பு குறைபாடு சம்மந்தமான பதிவொன்ருடன் இன்று உங்களை சந்திக்கிறேன். ஏற்கனவே எமது தளத்தில் பேஸ்புக்-இல் இருக்கும் எமது நண்பர்களின் தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடிப்பது எப்படி என்ற ஒரு பதிவை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது பேஸ்புக் நண்பர்களின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையானது குறிப்பிட்ட ஒரு மென்பொருள் மூலம் நண்பர்களினது தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடிப்பதாகும்.

ஆனால் இன்று நான் பேஸ்புக்-ஐ வளம் வந்து கொண்டு இருக்கும் போது அவதானித்த மிகப்பெரியதொரு பாதுகாப்பு ஓட்டையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அதாவது நீங்கள் உங்களது பேஸ்புக் கணக்கை உங்களது தொலைபேசி இலக்கம் மூலம் வெரிபை செய்து குறித்த இலக்கத்தை யாருக்கும் பார்க்காதபடி செட்டிங்க்ஸ்-ல் மறைத்து வைத்தால் கூட, உங்களது தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களால் கண்டு பிடிக்க முடியும்.


எப்படி என்று உதாரணத்துடன் காட்டுகிறேன்.

கீழே காட்டப்பட்டிருக்கும் பேஸ்புக் கணக்கு எனது நண்பர் ஒருவருடையது. அவர் தனது கணக்கை வெரிபை செய்து அவரது போன் நம்பர்-ஐ மற்றவர்கள் பார்க்கும் படி செட்டிங்க்ஸ் செய்து வைத்துள்ளார்.

ஆகவே யார் வேண்டுமானாலும் இவரது தொலைபேசி இலக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.


இப்போது இவருடைய போன் நம்பர்-ஐ பேஸ்புக் சேர்ச் பார்-இல் டைப் செய்து தேடிப் பார்ப்போம்.


மேலே படத்தில் காட்டியிருப்பதை பார்த்தால் உங்களுக்கே புரியும். குறித்த நண்பரை அவரது தொலைபேசி இலக்கத்தை வைத்து பேஸ்புக்-இல் தேடும் போது, அவருடைய ப்ரோபைல் சரியாக காட்டப்படுகிறது.

சரி.. இதிலே எந்த பிரச்சினையும் இல்லை. குறித்த நண்பர், அவருடைய போன் நம்பர்-ஐ வெரிபை செய்து அனைவரும் பார்க்கும் விதமாக செட்டிங்க்ஸ் செய்து இருப்பதால் காட்டுகிறது என்று வைத்து கொள்வோம்.

இப்போது எனக்கு தெரியாத ஒரு போன் நம்பர்-ஐ (சும்மா Guessing-ல) பேஸ்புக் சேர்ச் பார்-இல் டைப் செய்து தேடி பார்ப்போம்.

உதாரனத்திட்கு இந்த நம்பர்-ஐ சேர்ச் செய்கிறேன். (00919575624813)

கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பதை பார்த்தால் உங்களுக்கே புரியும். குறித்த நம்பர்-இல் பேஸ்புக்-இல் யாருமே இல்லை என்று காட்டுகிறது.


சரி.. இப்போது இதற்கு அடுத்த போன் நம்பர்-ஐ (சும்மா Guessing-ல) சேர்ச் செய்து பார்த்ததில் எனக்கு கிடைத்த முடிவு கீழே..



அடுத்து இவரது ப்ரோபைல்-ஐ திறந்து பார்த்தேன். இவர் எனது பேஸ்புக் நண்பரும் இல்லை. அதே போல் இவர் தன்னுடைய போன் நம்பர்-ஐ பேஸ்புக்-இல் மற்றவர் பார்க்கும் படி ஷேர் செய்தும் இல்லை.

கீழே காட்டப்பட்டிருக்கும் இரண்டு படங்களையும் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
இவர் எனது பேஸ்புக் நண்பர் இல்லை.


இவர் அவருடைய போன் நம்பர்-ஐ மற்றவர் பார்க்கும் படி செட்டிங்க்ஸ் செய்தும் இல்லை.


அப்படி என்றால் ஏன் பேஸ்புக் எனக்கு குறித்த நபரை அவரது போன் நம்பரை வைத்து நான் தேடும் போது காட்டுகிறது?

இப்போது நீங்கள் கூறலாம், குறித்த நபர் அவருடைய நண்பர்கள் மட்டும் பார்க்கும் படி போன் நம்பர்-ஐ ஷேர் செய்து வைத்திருக்கலாம். ஆகவே தான் மற்றவர்களுக்கும் இப்படி சேர்ச்-இல் தேடும் போது கூட காட்டுகிறது என்று.

இல்லை நண்பர்களே. இதையும் நான் உறுதி செய்து கொண்டேன்.

என்னுடைய பேஸ்புக் நண்பர் ஒருவர், அவருடைய போன் நம்பர்-ஐ வெரிபை செய்து யாரும் பார்க்காதபடி செட்டிங்க்ஸ்-இல் மறைத்து வைத்துள்ளார்.

குறித்த நண்பரின் போன் நம்பர் எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், குறித்த நம்பர்-ஐ எனது மற்றுமொரு பேஸ்புக் கணக்கு மூலம் அவரது போன் நம்பர்-ஐ சேர்ச் செய்து பார்த்தேன். எனது நண்பருடைய பேஸ்புக் ப்ரோபைல் மிகச்சரியாக காட்டப்பட்டது.

ஆகவே இது முழுக்க முழுக்க பேஸ்புக்-இன் ஒரு பாதுகாப்பு குறைபாடு.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இதன் முடிவு என்ன?

நாம் சும்மா Guessing-ல் 10 போன் நம்பர்-ஐ பேஸ்புக் சேர்ச் பாரில் தேடிப்பார்த்தால் கட்டாயமாக 3,4 பேரின் பேஸ்புக் ப்ரொபைல் அங்கே காட்டப்படும். உங்களுக்கு சந்தேகம் என்றால், சும்மா ஒரு சில போன் நம்பர்-களை தேடிப்பாருங்கள்.

இவற்றிலே, பேஸ்புக் உபயோகிக்கும் பெண்கள் மறைத்து வைத்து இருக்கும் அவர்களது தொலைபேசி இலக்கமும் உள்ளடக்கம்.

இந்த குறையை எப்போது சரி செய்யும் பேஸ்புக் நிறுவனம்?