பேஸ்புக் கணக்கை எப்படி ஹேக் செய்யலாம் என்று காட்டிய பிரகாஷ்-இற்கு 15,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது பேஸ்புக் நிறுவனம்.

இன்று கூகுள் தேடிப்படும் விடயங்களில் பேஸ்புக் ஹேக் செய்வது எப்படி என்று அதிகமானவர்கள் தேடி வருகின்றனர். இணையத்தை உபயோகிக்கும் பெரும்பாலானோர், பேஸ்புக் கணக்கொன்றை வைத்து இருக்கிறார்கள். ஆகவே குறித்த நபருடைய அன்புக்குரியவரோ அல்லது குடும்ப அங்கத்தவர்களோ தங்களை எமாற்றுகின்றர்களா என்பது போன்ற காரணங்களுக்காக பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து விபரங்களை தெரிந்து கொள்ள முயட்ச்சிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இன்று எம்மை பற்றி அனைத்துமே தெரிந்தவர், எமது பெற்றோரோ அல்லது உறவினர்களோ இல்லை..! பேஸ்புக் தான்.

பரிந்துரைக்கப்படும் பதிவு


இவ்வாறு பெரும்பாலானோர் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய முயற்சித்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தியாவை சேர்ந்த பிரகாஷ் என்று அழைக்கப்படும் Security Researcher ஒருவர் மிக இலகுவாக பேஸ்புக் கணக்கை எப்படி ஹேக் செய்வது என்று காட்டியுள்ளார்.

எம்முடைய பேஸ்புக் கணக்கின் பாஸ்வேர்ட்-ஐ நாம் மறந்து விட்டால், அதை மறுபடியும் ரீசெட் செய்து கொள்ள எமது தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட இரகசிய இலக்கம் மூலம் ரீசெட் செய்து கொள்ளும் வசதியை பேஸ்புக் எமக்கு தந்துள்ளது. இந்த முறையை பயன்படுத்தியே beta.facebook.com மூலம் பிரகாஷ் பேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்வது எப்படி என்று காட்டி இருக்கிறார்.

இது குறித்து இவர், தனது தனிப்பட்ட ப்லொக்-இல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ-வை பார்ப்பதன் மூலம் இவர் எப்படி பேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்யாலாம் என்று கூறியிருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வீடியோ-வை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும் இந்த குறையை பிரகாஷ் கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு துறைக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.
உடனடியாக செயற்பட்ட பேஸ்புக்-இன் பாதுகாப்பு சம்மந்தமான குழு, மிக விரைவாக இந்த குறையை பேஸ்புக்-இல் நிவர்த்தி செய்து இருக்கிறார்கள்.


பேஸ்புக்-இல் காணப்படும் குறைகளை தெரியப்படுத்துவதால், பேஸ்புக் நிறுவனம் உரியவர்களுக்கு பரிசு தொகைகளை வழங்குவது நாம் யாவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் பேஸ்புக்-இல் காணப்படும் முக்கியமானதொரு குறையை தெரியப்படுத்தியதால் பிரகாஷ்-இற்கு பேஸ்புக் நிறுவனம் 15,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கி உள்ளது.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இது குறித்து பிரகாஷ் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்த கருத்தை மேலே படத்தில் காணலாம்.