ஒன்றிட்க்குள் 88. கணனிக்கு தேவையான 88 மென்பொருட்களை தன்னுள் உள்ளடக்கி இருக்கும் ஒரு மென்பொருள்.

விண்டோஸ் கணணிகளை உபயோகிக்கும்  பயனர்களுக்கான மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். எமது தளத்தில் ஏற்கனவே விண்டோஸ் கணணிகளை குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் போர்மட் செய்ய நேர்ந்தால், மறுபடியும் விண்டோஸ் இன்ஸ்டால் செய்த பின்னர்,  கணனிக்கு தேவையான சரியான டிரைவர்ஸ்-களை எப்படி பெற்றுக்கொள்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து கொள்ள முடியும்.

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்-க்கு தேவையான சரியான டிரைவர்ஸ்-களை தேடிக்கொள்வது எப்படி?

ஆகவே இதனுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது எமது கணணியை போர்மட் செய்து முடித்து விட்டு, சரியான டிரைவர்ஸ்-களையும் இன்ஸ்டால் செய்த பின்னர், அடுத்து நாம் எதிர் கொள்ள போகும் பிரச்சினை எமது கணனிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தரவிறக்கி நிறுவிக்கொள்வது.


எம்மிடம் ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட மென்பொருட்களின் பழைய பதிப்பை கணனியில் நிறுவுவதால், சில வேலை குறிப்பிட்ட மென்பொருள் சரியாக செயற்படாமல் போக வாய்ப்புள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்க்க நாம் எமது கணனியில் எப்போதும் அனைத்து மென்பொருட்களினதும் புதிய பதிப்பையே நிறுவிக்கொள்ள வேண்டும்.

ஆனால் கணனிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் சரியாக நினைவில் வைத்து அவற்றினது புதிய பதிப்புக்களை தேடி பெற்றுக்கொள்வது என்பது சற்று சிரமமான காரியம்.

ஆகவே இந்த வேலையை இலகுவாக செய்து முடிக்க அறிமுகமாகி இருக்கும் மென்பொருள் Ninite.
இந்த மென்பொருளினுடைய அதிகாரபூர்வ தளத்திற்கு சென்றால், அங்கே உங்களால் விண்டோஸ் கணனிக்கு தேவையான அனைத்துவிதமான மென்பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Ninite தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், குறித்த தளத்தில் உங்களது கணனிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தெரிவு செய்து கொள்ள முடியும்.

இந்த தளத்தில் கிட்டத்தட்ட விண்டோஸ் கணனிக்கு தேவையான 88 விதமான மென்பொருட்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு தேவையான மென்பொருட்களை தெரிவு செய்த பின்னர், Get Installer என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் உங்களது கணனியில் நிறுவ தேவையான சிறப்பு மென்பொருள் ஒன்று தரவிறக்கப்படும்.

அடுத்து தரவிறக்கிய சிறப்பு மென்பொருளை உங்களது கணனியில் நிறுவுவதன் மூலம், ஏற்கனவே நீங்கள் Ninite தளத்தில் தெரிவு செய்த அனைத்து  மென்பொருட்களும் உங்களது கணனியில் நிறுவப்படும்.