வாட்ஸ்அப் பற்றிய முக்கியமானதொரு விடயத்துடன் இன்றைய பதிவில் உங்களை சந்திக்கிறேன். புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப்-இன் அடுத்து அறிமுகமாக இருக்கும் வசதிகள் பற்றி அடிக்கடி இணையத்தில் செய்திகள் கசிய விடப்பட்டும்.
அந்த வகையில் ஆன்ராயிடு போனுக்கான அடுத்த வாட்ஸ்அப் பதிப்பில் வெளியாக இருக்கும் புதிய வசதிகள் பற்றி ஏற்கனவே எமது தளத்தில் பதிவொன்று எடுதப்பட்டது. அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போனுக்கான வாட்ஸ்அப் புதிய பதிப்பில் அறிமுகமாக இருக்கும் சில மாற்றங்கள்
ஆகவே இன்றைய பதிவிலும் வாட்ஸ்அப்-இல் எதிர்காலத்தில் அறிமுகமாக சாத்தியமாக இருக்கும் ஒரு புதிய வசதி பற்றிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதாவது, நீங்கள் இருக்கும் இடத்தை வாட்ஸ்அப்-இல் உங்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் வசதி.
இந்த வசதி எதிர்காலத்தில் வாட்ஸ்அப்-இல் அறிமுகபடுத்துவதட்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்திய விடயத்தை கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வாட்ஸ்அப் ட்ரான்ஸ்லேட் எனப்படும் தளம் (இது வாட்ஸ்அப்-க்கு சொந்தமான தளம்), வாட்ஸ்அப்-இல் பயன்படுத்தப்படும் அனைத்து வாசகங்களையும் பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் வேலையை செய்கிறது. இந்த தளத்தில் நமது வாட்ஸ்அப் கணக்கில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மொழி பெயர்க்கப்பட்டு காணப்படுகிறது.
இந்த தளத்தில் இருந்தே மேலே காட்டப்பட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயத்தின் படி, வாட்ஸ்அப்-இல் நாம் இருக்கும் இடத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வசதி விரைவிலோ, அல்லது சிறிது காலத்தின் பின்னரோ வெளிவரவிருக்கிறது என்பது உறுதியாகிறது.
Tech in Tamil
Tech News
WhatsApp
நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் வாட்ஸ்அப் -இன் புதிய வசதி

