பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து கேம் விளையாடுவது எப்படி?

பல்வேறு பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் சமூக வலைத்தளமான பேஸ்புக், அண்மையில் எமது பேஸ்புக் கணக்கில் உணர்வுகளை வெளித்துபடுத்தும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.

இதை தொடர்ந்து பேஸ்புக்-இல் அடுத்ததாக அறிமுகமாக இருக்கும் வசதி, பேஸ்புக் வீடியோ ப்ரோபைல். இது குறித்து ஏற்கனவே பேஸ்புக், அதிகாரபூர்வமான செய்திகளை வெளியிட்டு விட்டது. ஆகவே வெகு விரைவில் எமது பேஸ்புக் ப்ரோபைல் போட்டோவிலும் வீடியோ வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இது சம்மந்தமான மேலதிக விபரங்களை கீழ் வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் அனிமேஷன் ப்ரோபைல் பிக்சர் வசதி


இவ்வாறு பயனுள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் பேஸ்புக், தனது மெசன்ஜர்-இலும் புதிய பல சுவாரஸ்யமான வசதிகளை அறிமுகப்படுத்த மறக்கவில்லை.

அந்த வகையில் பேஸ்புக் மெசஞ்சர்-இல் மறைந்து கிடக்கும் சுவாரஸ்யமான வசதி ஒன்று வெளியில் வந்துள்ளது. மெசஞ்சர்-இல் உங்களது நண்பர்களுடன் அரட்டை அடித்து அடித்து அலுப்பாகி விட்டதா? வாருங்கள்... சிறிது நேரம் பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து விளையாடுவோம்.

ஆம். பேஸ்புக் மெசஞ்சர் மூலம் தற்போது கூடைப்பந்து விளையாட முடியும்.
முதலாவதாக உங்களது மெசஞ்சர்-ஐ திறந்து அதிலே இருக்கும் உங்கள் நண்பர் ஒருவருக்கு மெசஞ்சர் எமொஜி-இல் இருக்கும் கூடைப்பந்து எமொஜி-யை அனுப்புங்கள்.


இப்போது குறித்த எமொஜி-யை கிளிக் செய்யுங்கள்.

இப்போது வெள்ளை நிற திரை ஒன்றில் கூடைப்பந்து விளையாடுவதட்கான வசதி கிடைக்கும்.


ஆகவே இந்த முறை மூலம், மிக இலகுவாக உங்களது பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து விளையாட முடியும்.

குறிப்பு 

உங்களுடைய ஸ்மார்ட் போனில் குறித்த கூடைப்பந்து எமொஜி இல்லை என்றாலோ அல்லது குறித்த எமொஜி-யை கிளிக் செய்தவுடன் கூடைப்பந்து விளையாடுவதட்கான திரை தோன்றவில்லை என்றாலோ உங்களது மெசஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து விட்டு முயற்சித்து பாருங்கள்.