பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய முடியாதபடி செய்யும் அட்வான்ஸ் பாதுகாப்பு செட்டிங்க்ஸ்

உலகின் மிகப்பிரபல்யமான சமூக வலைத்தளமான பேஸ்புக்-ஐ இன்று பலகோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பலகோடி பயனர்களை கொண்டுள்ளதாலேயே பேஸ்புக் கணக்குகளின் பாதுகாப்பு சம்மந்தமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது பேஸ்புக் நிறுவனம்.

அண்மையில் கூட பேஸ்புக் கணக்கை எப்படி ஹேக் என்று காட்டிய இந்தியன் ஒருவனுக்கு 15,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கி இருந்தது பேஸ்புக். இது குறித்து எமது தளத்திலும் கூட பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. குறித்த நபர் பேஸ்புக் கணக்குகளை எப்படி ஹேக் செய்தார் என்பதை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக் கணக்கை எப்படி ஹேக் செய்யலாம் என்று காட்டிய இந்தியனுக்கு 15,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது பேஸ்புக் நிறுவனம்.


ஆகவே பேஸ்புக்-இல் இவ்வாறான பாதுகாப்பு ஓட்டைகள் இன்னும் காணப்படுவதால், பேஸ்புக் நிறுவனமானது தனது பயனர்கள் அனைவருக்கும் கீழ்வரும் பாதுகாப்பு செட்டிங்க்ஸ்-களை செயற்படுத்துமாறு அறிவுறுத்துகின்றது.

பரிந்துரைக்கப்படும் பதிவு

லொகின் அலெர்ட் செட்டிங்க்ஸ்-ஐ செயட்படுத்துங்கள்.

இந்த செட்டிங்க்ஸ்-ஐ உங்களது பேஸ்புக் கணக்கில் செயட்படுத்துவதால், உங்களது பேஸ்புக் கணக்கிற்கு நீங்கள் அல்லது வேறு யாரேனும் லொகின் செய்தால், உங்களது பேஸ்புக் கணக்கிற்கும்,  அதே போல் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் ஒன்று அனுப்பப்படும். ஆகவே இந்த வசதியை செயட்படுத்துவதால், உங்களது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் மறுநொடியே உங்களுக்கு தெரிய வரும். இதை செயற்படுத்த,

உங்களது பேஸ்புக் கணக்கில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Security என்பதில் Login Alert என்பதை கிளிக் செய்யுங்கள்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

அதிலே கீழே காட்டியிருப்பது போல் செட்டிங்க்ஸ்-ஐ செயற்படுத்தி Save என்பதை கிளிக் செய்யுங்கள்.


லொகின் அப்ரூவல் செட்டிங்க்ஸ்-ஐ செயட்படுத்துங்கள்.

இந்த செட்டிங்க்ஸ்-ஐ உங்களது பேஸ்புக் கணக்கில் செயட்படுத்துவதால், உங்களது பேஸ்புக் கணக்கிற்கு புதிய டிவைஸ்களில் இருந்து லொகின் செய்தால் உங்களது போனிற்கு இரகசிய குறியீடு ஒன்று வரும். இந்த குறியீட்டை வழங்கிய பின்னரே உங்களது பேஸ்புக் கணக்கிற்கு புதிய டிவைஸ்களில் இருந்து லொகின் செய்யக்கூடியதாய் இருக்கும். இதை செயற்படுத்த,
உங்களது பேஸ்புக் கணக்கில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Security என்பதில் Login Approval என்பதை கிளிக் செய்யுங்கள்.

அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களின் படி இந்த செட்டிங்க்ஸ்-ஐ உங்களது போன் நம்பர்-இன் மூலம் செயற்படுத்தி கொள்ளுங்கள்.


நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவி.

இது உங்களது பேஸ்புக் கணக்கில் கட்டாயம் செய்டபடுத்த பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றாகும். அதாவது உங்களது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டாலோ அல்லது லாக் ஆகி விட்டாலோ உங்களது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவி மூலம் உங்களது கணக்கை மீளப்பெறும் வசதி ஆகும்.

இந்த வசதியை உங்களது பேஸ்புக் கணக்கில் செயற்படுத்த,

உங்களது பேஸ்புக் கணக்கில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Security என்பதில் Trusted Contacts என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதிலே Choose Trusted Contacts என்று  காணப்படுவதை கிளிக் செய்து, உங்களது நம்பிக்கைக்குரிய நண்பர்களை அங்கே தெரிவு செய்து Save என்பதை கிளிக் செய்யுங்கள்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இந்த செட்டிங்க்ஸ்-கள் உங்களது பேஸ்புக் கணக்கில் செயற்பாட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் உங்களது பேஸ்புக் கணக்கை யாரவது ஹேக் செய்வது என்பது முடியாத காரியம் ஆகிறது. ஆகவே இந்த செட்டிங்க்ஸ் களை இப்போதே உங்களது பேஸ்புக் கணக்கில் செயற்படுத்தி விடுங்கள்.