ஆன்ராயிடு போனுக்கான வாட்ஸ்அப் புதிய பதிப்பில் அறிமுகமாக இருக்கும் சில மாற்றங்கள்

தினம்தோறும் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி, அண்மையில் தனது கோடிக்கணக்கான பயனர்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் மூலம் டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது போனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் உங்களது நண்பர்களுடன் டாகுமென்ட் பைல்-களை பகிர்ந்து கொள்ள முடியும். இது குறித்து எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்-இல் டாகுமெண்ட்ஸ் கோப்புக்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்



இதை தொடர்ந்து வாட்ஸ்அப் அடுத்த பதிப்பில் அன்றொஇட் போன்களுக்கு என்று சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். வாட்ஸ்அப்-இன் அன்றொஇட் போன்களுக்கான அடுத்த பதிப்பான 2.12.506, ஒரு சில செட்டிங்க்ஸ் மாற்றங்களுடன் அறிமுகமாக உள்ளது.

வரவிற்கும் புதிய வாட்ஸ்அப் பதிப்பில் செட்டிங்க்ஸ் மெனு-வில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

அதாவது தற்போது வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ்-இற்கு சென்றால், செட்டிங்க்ஸ் மெனு-கள் மட்டுமே காணப்படும். புதிய பதிப்பில் செட்டிங்க்ஸ் மெனு-விற்கு சென்றால், அங்கே உங்களது வாட்ஸ்அப் ப்ரோபைல் போட்டோவும் காட்டப்படும்.


மேலும் புதிய பதிப்பில் டேட்டா உபயோக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. அதாவது வாட்ஸ்அப்-இல் வரும் எந்த வகையான பைல்-கள் உங்களது போன் டேட்டா மூலம் தரவிறக்கப்பட வேண்டும், எந்த வகையான பைல்-கள் வைபை மூலம் தரவிறக்கபட வேண்டும் போன்ற செட்டிங்க்ஸ் தெரிவுகளை செய்து கொள்ள முடியும்.

அடுத்து Chat மற்றும் Calls ஆகிய இரண்டும் ஒரே மெனு-விற்குள் உள்ளடக்கப்படும்.
அண்மையில் வாட்ஸ்அப் செயலியை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்று வாட்ஸ்அப் அறிவித்திருந்தது. இருந்த போதிலும் தற்போதைய வாட்ஸ்அப் பதிப்பில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த பணம் செலுத்தும் மெனு காணப்படுகிறது. வாட்ஸ்அப் அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டு விட்டதால் இந்த மெனுவை புதிய பதிப்பில் நீக்கி இருக்கிறார்கள்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

வாட்ஸ் அப் 2.12.506 பதிப்பு அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகாத போதிலும் உங்களுக்கு Mirror தளங்களில் இருந்து நேரடியாக புதிய பதிப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும். அல்லது நீங்கள் கூகுள் ப்லே பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து இருந்தால் கூட வாட்ஸ்அப்-இன் அடுத்த பதிப்பை இப்போதே பெற்றுக்கொள்ள முடியும்.