கடந்த நாட்களில் இந்தியா முழுவதும் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்ட ஒரு விடயம், கூகுள் லூன். அதாவது வானில் பறக்கும் பலூன்களில் இருந்து பூமியில் இருப்பவர்களுக்கு இலவசமான இன்டர்நெட். இதுவே கூகுள் லூன் திட்டம். இந்த திட்டம் வெகு விரைவில் இந்தியாவில் ஆரம்பிக்கபட இருந்தது. ஆனால் இப்போது இந்த திட்டத்திற்கு ஒரு முட்டுக்கட்டை விதித்து இருக்கிறது இந்திய அரசு.
கூகுள் இந்திய அரசிடம் வழங்கிய லூன் திட்டத்தின் அறிக்கையில் frequency band எனப்படும் தொழினுட்பத்தை பயன்படுத்த போவதாக தெரிவித்திருக்கிறது. இதை பரிசீலித்த இந்திய அரசு, கூகுள் நிறுவனத்திற்கு மற்றுமொரு லூன் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு காரணம், கூகுள் நிறுவனம், இந்தியாவில் அமைக்கவிருக்கும் லூன் திட்டத்தில் பயன்படுத்தப்போகும் frequency band தொழினுட்பத்தை தற்போது இந்தியாவில் தொலைபேசி அழைப்புக்களை பரிமாற்ற பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.
ஆகவே இந்த தொழினுட்பத்தை கூகுள் லூன் திட்டத்திலும் பயன்படுத்துவதால், தொலைபேசி அழைப்புக்களை பரிமாற்றிக்கொள்வதில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்திய அரசு, லூன் திட்டம் தொடர்பில் கூகுள் நிறுவனத்திற்கு மற்றுமொரு அறிக்கையை வழங்குமாறு தெரிவித்து உள்ளது.
கூகுள் லூன் திட்டம், மற்றும் இது செயற்படும் விதம் பற்றி எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட விரிவான பதிவின் பிரதி ஒன்றை கீழே உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
லூன் திட்டத்தில், பூமியிலிருந்து 20- கிலோ மீட்டர் உயரத்தில், பெரிய அளவிலான பலூன்கள் பறக்கவிடப்பட்டு, அதில் அமைக்கப்பட்டிருக்கும் இணைய சர்வர்கள் மூலமாக, பலூன்கள் பறக்கும் உயரத்திற்குக் கீழாக வசிக்கும் மக்களுக்கு, இணைய இணைப்பு வழங்கப்படும்.
இந்த பலூன் மற்றும் அதில் அமைக்கப்படும் டிஜிட்டல் சாதனங்களுக்குத் தேவையான மின்சக்தி, சோலார் பேனல் மற்றும் வேகமாக வீசும் காற்றிலிருந்து நாள் முழுவதும் பெறப்படும். இந்த சாதனங்கள், தரையில் உள்ள சாதனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, வலைப்பின்னல்களை உருவாக்கி, இணையம் பயன்படுத்தத் தேவையான டிஜிட்டல் அலைகளை பூமியில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும்.
ஒவ்வொரு பலூனும் 4 கி.மீ. விட்ட அளவிலான வட்ட பரப்பளவில், இணைய இணைப்பினை வழங்கும். எல்.டி.இ. என அழைக்கப்படும், 4ஜி தொழில் நுட்பத்திற்கு இணையானது இது. ஒவ்வொரு பலூனும், குறைந்தது ஆறு மாதம் விண் வெளியில் பறந்து செயல்படும் வகையில் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tech in Tamil
Tech News
இந்தியா முழுவதும் இலவச இன்டர்நெட் இணைப்பை வழங்க இருந்த கூகுள் லூன் திட்டத்தில் இந்திய அரசு தடை
