உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் வைபை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு விடயம், வைபை. உங்களுடைய ஸ்மார்ட் போனில் வைபை வசதி இருக்கும் பட்ச்சத்தில், வைபை நெட்வொர்க் மூலமாக உங்களால் மிக இலகுவாகவும் வேகமாகவும் இணையத்தை அணுக முடியும்.

ஆகவே இன்றைய பதிவில் வைபை நெட்வொர்க் உடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். அதாவது உங்களுடைய ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் காணப்படும் வைபை நெட்வொர்க்-களுடைய கடவுச்சொல்லை எப்படி கண்டு பிடிப்பது என்பதாகும்.

இந்த உபாயத்தை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருக்கும் வைபை நெட்வொர்க்-களினுடைய கடவுச்சொல்லை கண்டு பிடிக்க வேண்டுமென்றால், கட்டாயமாக உங்களது ஆன்ராயிடு போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


ஆன்ராயிடு ரூட் என்றால் என்ன? இதை செய்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதை பற்றிய பதிவுகள் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டன. ஆகவே உங்களது ஆன்ராயிடு போன் இன்னும் ரூட் செய்யப்படவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?

அன்ராயிடு போனை ரூட் செய்வதற்கான 12 சிறந்த செயலிகள்

சரி.. எப்படி ரூட் செய்த ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை கண்டு பிடிப்பது என்று பார்ப்போம்.

எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க கீழ்வரும் ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு செயலி உதவுகிறது.
நிறுவிய செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.

இப்போது குறித்த செயலியானது, உங்களது போனில் ரூட் அனுமதியை கேட்கும். அதற்கு ஆம் என்று அனுமதியை வழங்குங்கள்.


அவ்வளவு தான்.. இப்போது உங்களது போனில் காணப்படும் அனைத்து வைபை நெட்வொர்க் உடைய பெயர், கடவுச்சொல் மற்றும் நெட்வொர்க் வகை போன்றவற்றை பட்டியலிட்டு காட்டும்.


மேலும் குறித்த வைபை நெட்வொர்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம் அதனது கடவுச்சொல்லை மிக இலகுவாக கோபி செய்யும் வசதியையும் தருகிறது இந்த அருமையான செயலி.


இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.


பரிந்துரைக்கப்படும் பதிவு

மிக இலகுவாக எமது ஆன்ராயிடு போனில் இருக்கும் வைபை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள உதவும் இந்த அருமையான செயலி, வைபை பிரியர்களின் போனில் கட்டாயம் இருக்கப்படவேண்டிய ஒரு செயலியாகும்.