உங்களது ஆன்ராயிடு போனை பாதுகாக்கும் பயர்வால் சிஸ்டம் ஒன்றை உருவாக்குவது எப்படி?

விண்டோஸ் கணணிகளை பயன்படுத்தும் நாம் பயர்வால் (Firewall) என்ற வார்த்தையை அதிகளவாக கேட்டு இருப்போம். பயர்வால் எனப்படுவது எமது கணணி இன்டர்நெட் இணைப்பு ஒன்றுடன் இணையும் போது, எமது கணனியில் இருந்து வெளிச்செல்லும் இணைப்புக்களையும் அதே போல், எமது கணனிக்கு உள்வரும் இணைப்புக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விடயமாகும்.

இன்டர்நெட் உடன் இணையும் கணணிகளை மிகவும் பாதுக்காப்பாக வைத்திருக்க இந்த பயர்வால் செட்டிங்க்ஸ் எமக்கு உதவுகிறது.

பயர்வால் ஒன்றின் முக்கிய பங்காக,
  • எமது கணணி எந்த மாதிரியான இன்டர்நெட் ரிக்வஸ்ட்-களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • அதே மாதிரி, எந்த வகையான ரிக்வஸ்ட்-களை வெளிச்செல்ல அனுமதிக்க வேண்டும்.
  • கணனிக்கு வரும் ஹேக்கிங் ரிக்வஸ்ட்-களை தடுப்பது,

என்று பல்வேறு கணணி பாதுகாப்பு சம்மந்தமான விடயங்களை கையாள்கிறது.


ஆகவே இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தும் அனைத்து கணணிகளும் பயர்வால் ஒன்றின் மூலம் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் கணனிகளில் காணப்படும் பயர்வால் சிஸ்டம் ஆனது, ஸ்மார்ட் போன்களுக்கு இல்லை. ஸ்மார்ட் போன்களில் பயர்வால் சிஸ்டம் ஒன்று இருக்கும் சந்தர்ப்பத்தில் எமது ஸ்மார்ட் போன் இன்டர்நெட் இணைப்புக்களுடன் இணையும் போது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனிற்கு பயர்வால் சிஸ்டம் ஒன்றை செயற்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க கீழ்வரும் ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு செயலி எமக்கு உதவுகிறது.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது இந்த செயலியில் உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளும், சிஸ்டம் பைல்ஸ் உட்பட பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.

இதிலே எந்த எந்த செயலிகள் உங்களது போனில் இருந்து இன்டர்நெட் இணைப்புடன் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.


இந்த வசதியில் இருக்கும் முக்கியமான பயன்கள் சிலவற்றை பார்ப்போம்.

உங்களது போனில் இருக்கும் செயலிகள் உங்களுக்கு தெரியாமலேயே இன்டர்நெட் உடன் இணைந்து டேட்டாவை வீணடிப்பதை தடுக்க முடியும்.

அதே போல், உங்களுக்கு தெரியாமல் வைரஸ் பைல்-கள் இன்டர்நெட்-இல் இருந்து டவுன்லோட் ஆக வாய்ப்பே இல்லை.

பரிந்துரைக்கப்படும் பதிவு

மேலும் வைபை இணைப்பில் எந்த மாதிரியான செயலிகள் இன்டர்நெட் உடன் இணைய வேண்டும், டேட்டா இணைப்பின் மூலம் எந்த மாதிரியான செயலிகள் இன்டர்நெட் இணைப்புடன் இணைய வேண்டும் என்பதை கூட தெரிவு செய்து கொள்ள முடியும்.

மேலும் போனில் இருக்கும் இணைய உலாவியில் இருந்து வரும் இன்டர்நெட் ரிக்வஸ்ட்-களை கட்டுப்படுத்துவது என்று பல்வேறு வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி.


இந்த அளவு பயனுள்ள பல வசதிகளை தரும் இந்த அருமையான ஆன்ராயிடு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இன்று இணையத்துடன் இணையும் ஸ்மார்ட் போன்களுக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர் கொள்ள உதவும் இந்த அருமையான செயலி, எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு ஒன்றாகும்.