இன்றைய பதிவில் மற்றுமொரு பயனுள்ள ஆன்ராயிடு சம்மந்தப்பட்ட ஒரு விடயத்துடன் உங்களை சந்திக்கிறேன். ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு கூகுள் ப்லே ஸ்டோரில் பல லட்ச்சக்கணக்கான சிறந்த செயலிகள் காணப்படுகின்றன.
ஆனால் நாம் குறிப்பிட்ட சில செயலிகளை எமது போனில் நிறுவ முயற்சித்தால், குறிப்பிட்ட செயலி, எமது நாட்டுக்கு இல்லை என்ற வாசகம் தோன்றுவதை அவதானித்து இருப்பீர்கள்.
ஆகவே இன்றைய பதிவில், இவ்வாறு எமது நாட்டிற்கு இந்த செயலி இல்லை என்று ப்லே ஸ்டோரில் காணப்படும் செயலிகளை எமது ஸ்மார்ட் போனிற்கு எப்படி நிறுவி கொள்வது என்று பார்ப்போம்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
இதற்கு உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வசிப்போருக்கு கூகுள் ப்லே ஸ்டோரில் கிடைக்காத செயலியான Spotify Music எனப்படும் செயலியை எப்படி எனது போனிற்கு நிறுவி கொண்டேன் என்று காட்டுகிறேன்.
முதலாவதாக உங்களது போனில் செட்டிங்க்ஸ்-இற்கு சென்று, அங்கே
உங்களது போனில் நிறுவி இருக்கும் செயலிகள் காணப்படும் மெனு-வை திறவுங்கள்.
அதிலே கூகுள் ப்லே ஸ்டோர் எனப்படும் செயலியை தெரிவு செய்து, Force Stop என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து Clear Data/ Cache என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே காணப்படும் இலவச ஆன்ராயிடு வி.பி.என் செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து,அமேரிக்கா என்பதை தெரிவு Connect செய்து என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது இந்த செயலி உங்களது போனை அமெரிக்க வி.பி.என் ஒன்றுடன் இணைத்து விடும்.
அடுத்து கூகுள் சர்ச்-இற்கு சென்று, உங்களுடைய நாட்டிக்கு இல்லை என்று ப்லே ஸ்டோரில் வந்த குறித்த செயலியை தேடி ப்லே ஸ்டோர் மூலம்
திறவுங்கள்.
அடுத்து கூகுள் ப்லெ ஸ்டோர்-இற்கு உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து லொகின் செய்யுங்கள்.
இப்போது குறித்த செயலியை உங்களது போனிற்கு நிறுவுவதற்கான அனுமதி கிடைத்து விட்டது.
இப்போது இந்த செயலியை உங்களது போனுக்கு நிறுவும் போது, கீழ் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு வாசகம் தோன்றும்.
அதிலே 'ஸ்கிப்' என்று இருப்பதை கிளிக் செய்து, மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனுக்கு குறித்த செயலியை நிறுவி கொள்ள முடியும்.
ஆகவே ப்லே ஸ்டோர்-இல் உங்களது நாட்டிற்கு இல்லாத செயலிகளை மிக இலகுவாக நிறுவி கொள்ள உதவும் ஆன்ராயிடு சிறப்பு வி.பி.என் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு சிறப்பு வி.பி.என் செயலி
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே இந்த சிறப்பு செயலியை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களுக்கு தேவையான அனைத்து செயலிகளையும் நிறுவி கொள்ள முடியும்.
குறிப்பு
மேலே நான் குறிப்பிட்டது போல, இந்த வி பி என் செயலியில் அமேரிக்கா என்பதை தெரிவு செய்யுங்கள். ஏன் என்றால், பெரும்பாலான ஆன்ராயிடு செயலிகள் அமெரிக்க நாட்டவர்களுக்கே முதலில் பயன்படுத்த கிடைக்கும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
கூகுள் ப்லே ஸ்டோரில் 'உங்களது நாட்டிற்கு இல்லை' என்று காணப்படும் செயலிகளை எமது போனுக்கு இன்ஸ்டால் செய்வது எப்படி?




