கீலோகர் மூலம் எமது பேஸ்புக், ஜிமெயில் போன்ற ஆன்லைன் கணக்குகள் ஹேக் செய்யப்படாமல் தடுப்பது எப்படி?

எமது தளத்தில் ஏற்கனவே பேஸ்புக் ஜிமெயில் போன்ற ஆன்லைன் கணக்குகளை மிக இலகுவாக கீலோகர் மூலம் எப்படி ஹேக் செய்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

மிக இலகுவாக பேஸ்புக் கணக்கை ஹேக் செய்வது எப்படி?

ஆகவே எமக்கு தெரியாமலேயே எமது கணனியில் யாரவது கீலோகர் மூலம் மிக இலகுவாக எமது ஆன்லைன் கணக்குகளை களவாட முடியும். அதானால் இன்றைய பதிவில் இவ்வாறு கீலோகர் மூலம் எமது பேஸ்புக் மற்றும் ஜிமெயில் போன்ற ஆன்லைன் கணக்குகள் ஹேக் செய்யப்படாமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.



எமது கணனியில் ஏதேனும் கீலோகர் மென்பொருள் இருக்குமேயானால் நாம் டைப் செய்தும் அனைத்தையும் மிக இலகுவாக சேமித்து வைத்து உரியவருக்கு காட்டி விடும். ஆனால் எமது கீபோர்ட்-ஐ என்க்ரிப்ட் செய்வதன் மூலம் மிக இலகுவாக எம்மால் கீலோகரை ஏமாற்ற முடியும்.

இவ்வாறு என்க்ரிப்ட் செய்வதால், நாம் எமது ஆன்லைன் கணக்குகளில் டைப் செய்யும் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் விபரங்கள் கீபோர்ட்-இல் வேறு சில எழுத்துக்களாகவே காட்டப்படும். இவ்வாறு செய்வதால், எமது சரியான கடவுச்சொல்லை கீலோகர்-களால் துல்லியமாக கண்டு பிடிக்க முடியாது.

இந்த வேலையை எமது கணனியில் மிக இலகுவாக செய்து முடிக்க கீழ்வரும் சிறப்பு மென்பொருள் எமக்கு உதவுகிறது.

இந்த மென்பொருளை உங்களது கணனியில் நிறுவுங்கள்.


அடுத்து உங்களது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து விடுங்கள்.

இப்போது கீலோகர்-களை ஏமாற்றக்கூடிய இந்த சிறப்பு மென்பொருள் உங்களது கணனியில் தானாக ஆரம்பிக்கப்படும்.


இப்போதிலிருந்து நீங்கள் உங்களது கணனியில் இருக்கும் எந்தவொரு உலாவியில் இருந்தும், பேஸ்புக் அல்லது ஜிமெயில் போன்ற ஆன்லைன் கணக்குகளுக்கு லொகின் செய்ய பயனர்கணக்கு மற்றும் கடவுச்சொல் என்பவற்றை டைப் செய்தால், குறிப்பிட்ட விபரங்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு வேறு எழுத்துக்களால் காட்டப்படும்.


ஆகவே இந்த முறை மூலம், மிக இலகுவாக உங்களது கணனியில் காணப்படும் கீலோகர்-களை ஏமாற்ற முடியும்.

இந்த பயனுள்ள மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.


ஹேக்கிங் முயற்சிகள் தலைவிரித்தாடும் இந்த கால கட்டத்தில் எமது ஆன்லைன் கணக்குகளை பாதுகாக்க இது போன்ற பாதுகாப்பு மென்பொருட்கள் கட்டாயம் எமது கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.