இன்றைய பதிவில் மற்றுமொரு இணையத்துடன் சம்மந்தப்பட்ட பயனுள்ள ஒரு விடயத்துடன் உங்களை சந்திக்கின்றேன். எமது தளத்தில் ஏற்கனவே இணைய வேகத்தை எப்படியெல்லாம் இலவசமாக அதிகரித்து கொள்ள முடியும் என்று சில பதிவுகளை எழுதி இருந்தேன். அந்த பதிவுகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
CMD மூலம் இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்வது எப்படி?
இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ள உதவும் 16 சிறந்த DNS முகவரிகள்
கூகுளின் அதிவேக DNS மூலம் கணணியின் இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரிப்பது எப்படி?
ஆகவே இதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் எமது இணைய இணைப்பின் வேகத்தை மற்றுமொரு முறை மூலம் எப்படி அதிகரித்து கொள்ள முடியும் என்று கூறுகிறேன்.
அதாவது உங்களிடம் ஒன்றிற்கு மேற்பட்ட இணைய இணைப்புக்கள் இருக்கின்றது என்றால், நான் கூறும் முறையை பின்பற்றி உங்களது இணைய வேகத்தை இரண்டு, மூன்று அல்லது நான்கு மடங்காக கூட அதிகரித்து கொள்ள முடியும்.
எப்படி என்றால், உங்களுடைய ஸ்மார்ட் போனில் உபயோகிக்கும் ஒரு இன்டர்நெட் இணைப்பு இருக்கின்றது என்று வைத்து கொள்ளுங்கள். அதே போல், கணனியில் வைபை மூலம் ஒரு இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது, அதே போல் 3G அல்லது 4G டொன்கல் ஒன்றில் மூலமும் இன்டர்நெட் உடன் இணையும் வசதி இருக்கின்றது என்று வைத்து கொள்ளுங்கள்.
ஆகவே இவை மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரு இன்டர்நெட் இணைப்பை உருவாக்குவது எப்படி என்பதே இன்றைய பதிவாகும்.
அப்படியென்றால், குறித்த 3 இன்டர்நெட் இணைப்புக்களும் ஒன்றாக இணையும் போது, உங்களுடைய இன்டர்நெட் வேகம் 3 மடங்காக அதிகரிக்கப்படும்.
இந்த இந்த முறையை உங்களது விண்டோஸ் கணணி, ஆன்ராயிடு மற்றும் ஐபோன் என்று அனைத்து டிவைஸ்களில் இருந்தும் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் விண்டோஸ், ஐபோன், ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு மென்பொருள்.
முதலாவதாக உங்களது மின்னஞ்சல் முகவரியை வழங்கி, உங்களுக்கான கணக்கு ஒன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்த மென்பொருளை உங்களது கணனியில் அல்லது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.
அடுத்து உங்களிடம் இருக்கும் அனைத்து இன்டர்நெட் வசதியையும் கணணி அல்லது ஸ்மார்ட் போனுடன் இணைத்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, நீங்கள் ஸ்மார்ட் போனில் இதை செய்யப்போகிறீர்கள் என்றால், மொபைல் டேட்டாவை ON செய்து விட்டு, அருகில் இருக்கும் வைபை நெட்வொர்க் உடனும் இணைந்து கொள்ளுங்கள்.
அதே போல் கணனியில் இதை செய்ய போகிறீர்கள் என்றால், உங்களிடம் இருக்கும் அனைத்து இன்டர்நெட் இணைப்புக்களையும் கணனியில் இணைத்து கொள்ளுங்கள். உதாரணமாக வைபை நெட்வொர்க் ஒன்றுடன் கணணியை இணைத்து கொள்ளுங்கள். அத்துடன் டொன்கல் மூலம் வழங்கக்கூடிய 3G அல்லது 4G இன்டர்நெட் இணைப்பையும் கணனியில் இணைத்து கொள்ளுங்கள்.
இப்போது குறித்த மென்பொருளில் நீங்கள் ON செய்திருக்கும் அனைத்து இண்டரென்ட் இணைப்புக்களும் பட்டியலிட்டு காட்டப்படும்.
அவ்வளவு தான். உங்களது அனைத்து இன்டர்நெட் இணைப்புக்களும் இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த மென்பொருளை மினிமைஸ் செய்து வைத்து விட்டு இணையத்தை உபயோகிக்க தொடங்குங்கள். இணைய வேகத்தில் நம்ப முடியாத அளவு மாற்றம் ஒன்று தெரிபடும்.
இந்த அருமையான மென்பொருளை/ செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். விண்டோஸ், ஆன்ராயிடு, ஐபோன் என்று அனைத்திற்கும் இந்த மென்பொருள்/ செயலி கிடைக்கும்.
இன்டர்நெட் இணைப்புக்களை ஒன்றாக இணைக்கும் செயலி/ மென்பொருள்
பரிந்துரைக்கப்படும் பதிவு
குறிப்பு
ஆரம்பத்தில் 1 GB அளவான டேட்டாவை மட்டுமே இந்த முறை மூலம் உபயோகிக்க முடியுமான போதும், குறித்த இந்த மென்பொருளை உங்களது நண்பர்களுக்கும், இந்த மென்பொருளில் காணப்படும் பரிந்துரைக்கும் வசதி மூலம் தெரியப்படுத்தினால் அடுத்த 6 மாதங்களுக்கு மேலதிகமாக 1 GB டேட்டா கிடைக்கும். இந்த மென்பொருளை உங்களுடைய எத்தனை நண்பர்களுக்கு வேண்டுமானாலும் பரிந்துரைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே உங்களுடைய இன்டர்நெட் இணைப்பு மிகவும் மெதுவாக இருக்குமேயானால், இந்த முறை மூலம் உங்களிடம் இருக்கும் அனைத்து இன்டர்நெட் இணைப்புக்களையும் ஒன்றாக இணைத்து உங்களது இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
Tech in Tamil
Internet
Tips and Tricks
பல இன்டர்நெட் இணைப்புக்களை இணைத்து ஒரு இன்டர்நெட் இணைப்பு உருவாக்குவது எப்படி? இதனால் உங்களின் இன்டர்நெட் வேகம் 2,3 அல்லது 4 மடங்காக அதிகரிக்கும்.


