எமது தளத்தில் கணனிகளில் இருந்து இணையத்தை உபயோகிக்கும் போது, இணைய வேகம் குறைவாக இருந்தால் குறிப்பிட்ட சில செட்டிங்க்ஸ் மாற்றங்களை செய்வதன் மூலம் எப்படி எமது கணனிக்கான இணைய வேகத்தை ஓரளவுக்கு அதிகரித்து கொள்ள முடியும் என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன்.
அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.
இணையம் உபயோகிக்கும் அனைவருக்கே உள்ள பொதுவான பிரச்சினை, இணைய வேகம். சில இடங்களில் நீங்கள், உங்கள் இணைய வழங்குனரிடம் இருந்து சிறப்பான வேகத்தை பெற்று கொள்ள முடியுமாக இருந்தாலும், பல இடங்களில் டவர் சரியாக கிடைக்காத காரணத்தால் இன்டர்நெட் வேகம் மிக மந்தமாகவே உள்ளது.
இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் கணனியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
ஆகவே எந்த விதமான செட்டிங்க்ஸ் மாற்றங்களை செய்வதன் மூலம் உங்களது கணனியின் இணைய வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும் என்பதை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.
எதுவித மென்பொருளும் இன்றி இன்டர்நெட் வேகத்தை கிட்டத்தட்ட 30%-ற்கும் மேல் அதிகரிப்பது எப்படி?
எந்த விதமான மென்பொருட்களும் இன்றி இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளும் உபாயங்களின் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் விண்டோஸ் கணனியில் இருக்கும் cmd மூலம் எப்படி இணைய வேகத்தை சற்று அதிகரித்து கொள்ள முடியும் என்பதை பார்ப்போம்.
உங்களது கணனியில் சர்ச் பார்-இல் cmd என்று டைப் செய்து, cmd-ஐ ரைட் கிளிக் செய்து Run as administrator என்பதை தெரிவு செய்து ஆரம்பியுங்கள்.
இப்போது உங்கள் கணனியில் cmd திறக்கப்படும்.
அங்கே கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது, போல் கீழ்வரும் வாசகத்தை டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
netsh int tcp set global chimney=enabled
அடுத்து கீழே படத்தில் காட்டி இருக்கும் வாசகத்தை டைப் செய்யுங்கள்.
netsh int tcp set global autotuninglevel=normal
இதை சரியாக டைப் செய்து முடித்த பின்னர், Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இறுதியாக ipconfig /flushdns என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள சில cmd ஹேக் உபாயங்களை பயன்படுத்தி உங்களது கணனியின் இன்டர்நெட் வேகத்தை முன்னர் இருந்ததிலும் பார்க்க இலவசமாக அதிகரித்து கொள்ள முடியும்.
இந்த உபாயங்கள் உங்களது இன்டர்நெட் இணைப்பு வேகத்தை பாரிய அளவில் அதிகரிக்காவிட்டாலும், கட்டாயமாக முன்னர் இருந்ததிலும் பார்க்க வேகமாக்கி கொள்ள உதவும். இதை நீங்கள், உங்களது இணைய இணைப்பின் வேகத்தை மேலே குறிப்பிட்ட உபாயங்களை செய்ய முன்னரும், செய்து முடித்த பின்னரும் பரீட்ச்சித்து பார்ப்பதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.
Tech in Tamil
Internet
Tips and Tricks
CMD மூலம் இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்வது எப்படி?


