ஆகவே இன்றைய பதிவில் உங்களது கல்லூரி மற்றும் அலுவலகங்களில் ப்லோக் செய்து வைக்கப்பட்டிருக்கும் தளங்களுக்கு செல்வதற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.
முதலாவதாகே கூறி விடுகிறேன், கீழே நான் பட்டியலிட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளும் உங்களது கல்லூரியிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கும் இன்டர்நெட்-இல் சாதாரணமாக ரௌட்டர் மூலமாக ப்லோக் செய்து இருந்தால் மட்டுமே பெரும்பாலும் சரியாக வேலை செய்யும்.
அப்படியல்லாமல் குறித்த இன்டர்நெட் இணைப்பை பயர்வால் (Firewall) தொழினுட்பத்தை பயன்படுத்தி ப்லோக் செய்திருந்தால் கீழ் குறிப்பிட்டுள்ள முறைகள் எந்த அளவுக்கு உங்களுக்கு உதவும் என்று என்னால் சரியாக கூற முடியாது.
IP முகவரி மூலம் அச்செஸ் செய்யுங்கள்.
அனைத்து தளங்களுக்குமென்று தனியே ஒரு IP முகவரி உண்டு. நீங்கள் அச்செஸ் செய்ய நினைக்கும் தளத்தின் IP முகவரியை CMD மூலம் தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக நான் பேஸ்புக் தளத்தின் IP முகவரியை எப்படி தெரிந்து கொள்வது என்று காட்டுகிறேன்.
உங்களது கணனியில் CMD-ஐ ஆரம்பியுங்கள். அதிலே ping www.facebook.com என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள். அடுத்து மேலே படத்தில் நான் காட்டியிருப்பது போல் தோன்றும். அங்கே சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டு காட்டியிருப்பது தான் பேஸ்புக் தளத்தின் IP முகவரி.
இப்போது அந்த முகவரியை உங்களது உலாவியில் டைப் செய்து குறித்த தளத்திற்கு அச்செஸ் செய்யுங்கள்.
இந்த முறை வெற்றியளிக்கவில்லை என்றால், குறித்த IP முகவரியை டெசிமல் எண்ணிற்கு மாற்றி அச்செஸ் செய்ய முயற்சியுங்கள்.
IP முகவரியை டெசிமல் எண்ணிற்கு மாற்ற கீழே வழங்கப்பட்டிருக்கும் தளத்தை உபயோகியுங்கள்.
IP முகவரியை டெசிமல் எண்ணிற்கு மாற்ற ஆன்லைன் -இல் பல தளங்கள் உண்டு. அதிலே மிகவும் சிறந்த தளமாக இந்த தளத்தை குறிப்பிடலாம்.
கீழே படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருப்பது தான், குறித்த IP முகவரியில் டெசிமல் எண். இப்போது அந்த இலக்கத்தை உங்களது உலாவியில் டைப் செய்து குறித்த தளத்திற்கு அச்செஸ் செய்யுங்கள்.
TOR எனப்படும் சிறப்பு உலாவியை உங்களது கணனியில் நிறுவி, இதன் மூலம் குறித்த தளத்தை அச்செஸ் செய்யுங்கள். இந்த உலாவி இணையத்தை அனோனிமஸ் முறையில் அச்செஸ் செய்ய உதவியாக இருக்கும் ஒரு உலாவி ஆகும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
நீங்கள் அச்செஸ் செய்ய நினைக்கும் குறித்த தளத்தின் முகவரின் முன்னால் இருக்கும் https என்பதில் s-ஐ நீக்கி விட்டு குறித்த தளத்தை அச்செஸ் செய்ய முயற்ச்சித்து பாருங்கள்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
நீங்கள் கணனியில் இருந்து அச்செஸ் செய்ய நினைக்கும் குறித்த தளத்தில் மொபைல் வெர்சஸ் முகவரியை முயற்ச்சித்து பாருங்கள். உதாரணமாக நீங்கள் www.facebook.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால் m.facebook.com என்று டைப் செய்து முயற்ச்சித்து பாருங்கள்.



