இந்தியாவில் பிரபல மொபைல் நெட்வொர்கிடமிருந்து 1GB 3G டேட்டா வெறும் 1 ரூபாய்க்கு..

எமது தளத்தில் ஸ்மார்ட் போனின் இலவசமாக டேட்டா உபயோகிப்பது எப்படி மற்றும் ஸ்மார்ட் போனிற்கு இலவசமாக ரீசார்ஜ் செய்து கொள்வது எப்படி என்றெல்லாம் சில பதிவுகள் எழுதப்பட்டிருந்தன. நீங்கள் அந்த பதிவுகளை தவறவிட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இந்த உபாயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது மொபைலை இலவசமாக ரீ-சார்ஜ் செய்து கொள்ள வேண்டுமா?

உங்களது போனில் இருந்து இலவசமாக மொபைல் டேட்டா உபயோகிப்பது எப்படி?

அந்த வரிசையில் இன்று மற்றுமொரு சிறந்த டேட்டா சலுகை ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். ஒரு வேலை இந்த விடயம் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்ததாக இருக்கலாம். இருந்தபோதிலும் தெரியாத நண்பர்களுக்காக இந்த டேட்டா சலுகையை முன்வைக்கிறேன்.


இந்தியாவின் பிரபல்ய மொபைல் நெட்வொர்க் ஆனா Idea ஒரு ரூபாய்க்கு 1 GB டேட்டாவை வழங்குகின்றது. இந்த 1 GB ஆனது 3G டேட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

சரி.. இந்த சிறந்த சலுகையை எப்படி உங்களது போனில் செயற்படுத்தி கொள்வது என்று பார்ப்போம்.

இந்த சலுகையை Idea மொபைல் நெட்வொர்க் ஆனது தங்களுடைய அன்றொஇட் மற்றும் ஐபோன் செயலியை குறிப்பிட்ட பயனர் நிறுவும் போது வழங்குகின்றது.

ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது அன்றொஇட் அல்லது ஐபோனிட்கான Idea மொபைல் நெட்வொர்க் செயலியை நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால் ஒரு ரூபாய்க்கு 1 GB டேட்டாவை பெற்றுக்கொள்வதற்கான வசதி காணப்படும்.

அதிலே ரீ சார்ஜ் என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து Exclusive Offer என்று இருப்பதில் கீழே காட்டியுள்ளவாறு APP1 என்று டைப் செய்து Confirm என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து  ஒரு ரூபாயை செலுத்துவதற்கான கட்டண முறையை தெரிவு செய்யுங்கள்.

இந்த கட்டனத்திட்காக அவர்கள் வழங்கி இருக்கும் ஏதேனும் ஒரு கட்டண முறையை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்திய பின்னர் உங்களுக்கான 1 GB டேட்டா உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆகவே Idea மொபைல் நெட்வொர்க்-கினுடைய ஸ்மார்ட் போன் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

அன்றொஇட் செயலி
ஐபோன் செயலி

இந்த 1 GB டேட்டா சலுகை 28 நாட்கள் வரை ஐடியா மொபைல் நெட்வொர்க் பாவனையாளர்களின் ஸ்மார்ட் போனில் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.