அன்றொஇட் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த அன்றொஇட்-இன் அடுத்த உயங்குதளம்
பற்றிய செய்திகளுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். அன்றொஇட்-இன் அடுத்த இயங்குதளம் பற்றிய அதிகாரபூர்வ செய்திகளை கூகுள் மற்றும் அன்றொஇட் டிவலபர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே அன்றொஇட் போன்களுக்கு அண்மையில் வெளியாகி பெரிதும் வரவேற்பு பெற்ற அன்றொஇட் மார்ஸ்மெலோ இயங்குதளம் அடுத்து வரும் நாட்களில் பெரும்பாலான அன்றொஇட் ஸ்மார்ட் போன்களுக்கு கிடைக்க உள்ளது. இது குறித்தான விபரமான பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டது. ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனிட்கும் மார்ஸ்மெலோ இயங்குதளத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனிட்கும் மார்ஸ்மெலோ இயங்குதள அப்டேட்
இதை தொடர்ந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் கூகுள் அன்றொஇட் 7.0 இயங்குதளத்தின் டிவலபர் ப்ரீவீவ் பதிப்பை மார்ச் 9 ஆம் திகதி வெளியிட்டு உள்ளது.
நேற்று வெளியாகிய அன்றொஇட் 7.0 இயங்குதளத்தின் டிவலபர் ப்ரீவீவ், Nexus 6P, Nexus 5X, Nexus 6, Nexus 9 (Wi-Fi and LTE), Nexus Player and Pixel C மற்றும் சில ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்கனவே கிடைத்து இருக்கிறது.
நீங்களும் மேலே குறிப்பிட்டுள்ள அன்றொஇட் ஸ்மார்ட் போன்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர் என்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று, அன்றொஇட் டிவலபர் தளத்தில் இருந்து உங்களது போனுக்கான புதிய இயங்குதளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள இயங்குதள பதிப்பு, டிவலபர் ப்ரீவீவ் என்பதால், கட்டாயமாக பல்வேறு குறைபாடுகள் காணப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. ஆகவே அன்றொஇட் இயங்குதளம் பற்றிய தெளிவான அறிவு இல்லாதவர்கள், தற்போது வெளியாகி இருக்கும் பதிப்பை உங்களது போனில் நிறுவுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் இந்த புதிய இயங்குதளத்திட்கான பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. ஆனால் கட்டாயமாக அன்றொஇட் 7.0 இயங்குதளத்தின் பெயர் N எழுத்திலேயே ஆரம்பிக்கப்படும் என்பதும், அது பெரும்பாலும் இனிப்பு பண்டம் ஒன்றின் பெயராகவே இருக்கும் எனவும் கூகுள் கருத்து வெளியிட்டுள்ளது.
இந்த புதிய இயங்குதளம் பற்றி இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி, பெரும்பாலும் Android 7.0 Nutella என்ற பெயர் வைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் அன்றொஇட் 7.0 இயங்குதளம் பல்வேறு பயனுள்ள வசதிகளுடன் அறிமுகமாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள டிவலபர் ப்ரீவீவ்-இல் காணப்படும் அனைத்து வசதிகளும் மேலும் சீராக்கப்பட்டு அதிகாரபூர்வ பதிப்பில் எமது அன்றொஇட் ஸ்மார்ட் போனை வந்து சேரும்.
தற்போது அறிமுகமாகி உள்ள அன்றொஇட் 7.0 டிவலபர் ப்ரீவீவ் பதிப்பை இங்கே சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
கூகுள்-இல் இருந்து வரும் நம்பத்தகுந்த செய்திகளின் படி, இந்த புதிய இயங்குதளம், எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.
Tech in Tamil
Android
Tech News
ஆண்ராயிடு N 7.0 இயங்குதளத்தின் டிவலபர் ப்ரீவீவ் பதிப்பு வெளிவந்துள்ளது (டவுன்லோட் லிங்க் உள்ளே..)
