இணைய உலகில் புதிய பல சாதனைகளை படைத்து வரும் கூகுள் நிறுவனம், தனது அடுத்த இமாலய சாதனையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.ஏற்கனவே கூகுள் நிறுவனம், 5G தொழினுட்பத்தை பரிசீலனை செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
அதாவது Drones என்று அழைக்கப்படும் தொழினுட்பத்தை பயன்படுத்தி காற்றில் இருந்து 5G இணைய தொழினுட்பத்தை பரிசீலனை செய்து வருகின்றது.
இது குறித்து எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
கூகுள் அறிமுகப்படுத்தும் 5G இன்டர்நெட் காற்றின் மூலம் செயற்படுவதோடு 4G தொழினுட்பத்தை விட 40 மடங்கு வேகமானதாக இருக்கும்.
இவ்வாறு இணைய உலகில் புதிய பல புரட்சிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கூகுள், தனது அடுத்த இமாலய சாதனையை நோக்கிய தகவல்களை இணையத்தில் கசிய விட்டுள்ளது. அதாவது தற்போது இருக்கும் கூகுளின் பைபர் (Fiber) இன்டர்நெட் வேகத்தை விட பல மடங்கு வேகம் கொண்ட இன்டர்நெட் இணைப்புக்களை உருவாக்குவது.
அண்மையில் வெளியான கூகுள் பைபர் தொழிநுட்ப வேலை வாய்ப்புக்களுக்கான விளம்பரமொன்றில், கூகுள் நிறுவனம்,செக்கனுக்கு GB அளவான இன்டர்நெட் வேகத்தை உருவாக்கும் சிந்தனைகள் கொண்ட Photonics இன்ஜினியர்களை அழைப்பு விடுத்து இருக்கிறது.
தற்போது பாவனையில் இருக்கும் கூகுளின் பைபர் இன்டர்நெட், செக்கனுக்கு 1Gbps அளவான இன்டர்நெட் வேகத்தை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இது, அமெரிக்காவில் சாதாரண மக்கள் பயன்படுத்தி வரும் 11.7Mbps வேகத்தை விட 100 மடங்கு அதிக வேகம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியர்கள் நாம் பாவிக்கும் சாதாரண 2Mbps இன்டர்நெட் வேகத்தை விட 524 மடங்கு அதிக வேகம் கொண்டதாகும்.
ஆகவே இந்த பைபர் வேகத்தையே இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் வேளையில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி வெற்றியளிக்கும் நேரத்தில், HD தரத்திலான திரைப்படங்களை வெறும் 7 செக்கன்களில் தரவிறக்கி கொள்ள கூடியதாய் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Tech in Tamil
Google
Internet
Tech News
செக்கனுக்கு 1Gbps வேகத்தில் இருக்கும் Fibar இன்டர்நெட் வேகத்தை இன்னும் பல மடங்காக அதிகரிக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம்..
