உங்களது வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று ஆன்ராயிடு போன் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

சில நாட்களுக்கு முன்னர், எமது தளத்தில் உங்களுடைய வை பை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி கணனியின் மூலம் தெரிந்து கொள்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன்.அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.

இன்று வைபை தொழிநுட்பம் ஆனது பொதுவாக அனைவரின் வீட்டிலும் காணப்படும் சாதார ஒரு விடயமாகி விட்டது. வைபை தேவையானது மனிதனின் அடிப்படை தேவைகளில் இடம் பிடித்து விட்டது என்று கூறினாலும் மிகையாகாது.

இன்று உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான தொழிநுட்ப சாதனங்களில் வைபை தொழிநுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கையடக்க தொலைபேசியிலே அல்லது மடிக்கணணியில் வைபை தொழிநுட்பம் இருக்கும் பட்சத்தில், நொடிப்பொழுதில் உங்களுக்கு இணையத்துடன் தொடர்பு கொள்ள முடியும். இதனாலேயே பல வீடுகளில் இன்று வைபை பாவிக்க கூடிய விதமான இணைய இணைப்புக்களை காணலாம்.


இவ்வாறு வைபை தொழிநுட்பம் உங்கள் இணைய இணைப்புடன் இருக்கும் பட்சத்தில் யார் யார் உங்கள் இணைய இணைப்பை பயன்படுத்தி இன்டர்நெட்டில் உலா வருகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியாது.

ஏனெனில்  ஒரு சில உபாயங்களை பயன்படுத்தி வைபை நெட்வொர்கின் பாதுகாப்பு வெளியை உடைக்க முடியும்.

இந்த பதிவின் தொடர்ச்சியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று கணனியில் இருந்து தெரிந்து கொள்வது எப்படி?

ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள முறைக்கு ஒப்பான ஒரு முறையை உங்களது ஆன்ராயிடு போனிலும் பயன்படுத்தி, உங்களது வைபை நெட்வொர்க்-ஐ யாரவது ஹேக் செய்து உபயோகித்து வருகிறார்களா என்று தெரிந்து கொள்ள முடியும்.

எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு செயலி.
முதலாவதாக உங்களது போனை உங்கள் வை பை நெட்வொர்க் உடன் இணையுங்கள்.

அடுத்து இந்த செயலியை நிறுவி உங்களது போனில் ஆரம்பியுங்கள்.


இப்போது இந்த செயலியில் உங்களது வைபை நெட்வொர்க் உடன் இணைந்து இருக்கும் அனைத்து டிவைஸ் களும் பட்டியலிட்டு காட்டப்பட்டும்.

மேலும் உங்களது வை பை நெட்வொர்க் உடன் இணைந்து இருக்கும் குறிப்பிட்ட டிவைஸ் இன் அனைத்து விபரங்களை கூட உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.



ஆன்ராயிடு போனுக்கான இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி

பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே குறிப்பிட்ட செயலியில் பட்டியலிட்டு காட்டப்பட்டிருக்கும் டிவைஸ் களில் நீங்கள் உங்களது வை பை நெட்வொர்க் உடன் இணைய அனுமதிக்காத டிவைஸ் கள் காணப்படுமேயானால் உங்களது வை பை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். இவ்வாறன சந்தர்ப்பமொன்றில் உங்களது வை பை நெட்வொர்க்கினுடைய கடவுச்சொல்லை மாற்றுவது சிறந்தது.