ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தமது இடத்தை உலக ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் தக்கவைத்து கொள்வதற்காக பல்வேறு வசதிகளுடன் நவீன தொளினுட்பத்திலான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஸ்மார்ட் போன்களுக்கு பெயர்போன இரண்டு நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சுங் என்பது நாம் யாவரும் அறிந்த விடயமே. இந்த இரண்டு நிறுவனங்களும் தமது அதிசிறந்த தயாரிப்புக்களை ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய 6S சீரீஸ் ஸ்மார்ட் போன்களும் சாம்சுங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய கேலக்ஸ்சி சீரீஸ் ஸ்மார்ட் போன்களையும் குறிப்பிட்டு காட்டலாம்.
இந்த வரிசையில் சாம்சுங் நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள ஸ்மார்ட் போன் கேலக்ஸ்சி S7. உலகில் இதுவரை அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த சாம்சுங் S7 தனிச்சிறப்போன்றுடன் வெளிவரவிருக்கிறது.
அதாவது நம் அனைவருக்குமே தெரிந்தது போல், ஸ்மார்ட் போன்களை அதிகளவான நேரம் உபயோகித்து கொண்டிருக்கும் போது அல்லது கேம்ஸ்-களை விளையாடும் போது போன் ஹீட் ஆகுவது சாதாரண விடயம்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
அவ்வாறு போன் ஹீட் ஆகியதும் சிறிது நேரத்திற்கு போனை உபயோகிக்காமல் இருந்தால் எங்களது ஸ்மார்ட் போன் பழைய நிலைமைக்கு திரும்பி விடும். இதுவே இன்றைய ஸ்மார்ட் போன்களின் இயல்பு நிலை.
ஆனால் சாம்சுங் S7 போன் இந்த விதிக்கு ஒருபடி மேலே சென்று கூலர் சிஸ்டம் ஒன்றுடன் அறிமுகமாக இருக்கிறது. அதாவது குறித்த ஸ்மார்ட் போன் அதிகளவில் ஹீட் ஆகும் போது கூலர் சிஸ்டம் தானாக செயற்பட ஆரம்பித்து போன் ஹீட்டை தணிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூலர் சிஸ்டம் ஸ்மார்ட் போனில் காணப்படும் முக்கியமான ஹர்ட்வேர் பாகங்கள் ஹீட் ஆக்குவதை தடுப்பதோடு S7-இன் ப்ரோசெஸ்சர் ஹீட் ஆகாமல் தடுப்பது இதன் சிறப்பு பணி என சாம்சுங் நிறுவனத்தின் முக்கிய தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த கூலர் சிஸ்டம், நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் AC-யை போன்று செயற்பட்டு போன் ஹீட் ஆகுவதை தடுக்க கூடியது என்றும் கூறியுள்ளார்.
ஆகவே இந்த சிறப்பு கூலர் சிஸ்டம் உங்களுடைய சாம்சுங் S7-இன் முக்கிய பாகங்கள் ஹீட் ஆகுவதை தடுத்து உங்களது போனை மிகவும் கூலாக வைத்து இருக்கும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
சாம்சுங் S7 ஸ்மார்ட் போனை உபயோகிக்க போகும் கேம்ஸ் பிரியர்களுக்கு இனி தங்களது ஸ்மார்ட் போன் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுவதால் ஹீட் ஆகி விடுமே என்ற கவலை வேண்டாம்.
Tech in Tamil
Tech News
போன் ஹீட் ஆகுவதை தடுக்கும் விதமாக சிறப்பு கூலர் சிஸ்டத்துடன் அறிமுகமாகிறது சாம்சுங் S7
