இன்று ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து இருக்கும் ஒரு விடயம் தான் 251 ரூபாய் ஸ்மார்ட் போன். Ringing Bells எனப்படும் இந்திய நிறுவனம் ஒன்று இணையத்தில் இந்த செய்தியை காட்டுத்தீயாய் பரவ விட்டு இருக்கிறது.
குறிப்பிட்ட நிறுவனத்தின் கருத்துப்படி வெறும் 251 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட போகும் Freedom 251 என்ற பெயருடைய ஸ்மார்ட் போனில் கீழ்வரும் வசதிகள் உண்டு.
4 அங்குல அளவுடைய திரை.
1.3GHz வேகத்துடன் கூடிய quad-core processor உடன் இயங்கும்.
RAM-இன் 1GB அளவு கொண்டதாக இருக்கும்.
8 GB இன்டர்னல் மெமரி உடன் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போனை 32GB மெமரி வரை அதிகரித்துக்கொள்ள முடியும்.
அன்றொஇட் 5.1 லொல்லிபொப் இயங்குதளம்.
இரண்டு சிம் வசதி.
3.2 MP பின் பக்க கேமரா மற்றும் 0.3 MP முன் பக்க கேமரா.
வைபை மற்றும் ப்ளு டூத் வசதி
இந்த ஸ்மார்ட் போனை பெற்றுக்கொள்வதற்கான முன் பதிவுகளை நாளை (18/02/2016) தொடக்கம் அடுத்த 3 நாட்களுக்கு செய்து கொள்ள முடியும்.
சரி.. இந்த அளவு விலை குறைவாக ஒரு ஸ்மார்ட் போன் விட்கப்படுவதட்கான காரணம் என்ன என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஆகவே அது பற்றிய ஒரு சிறிய அலசல்.
வெறும் 251 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் விற்கப்பட போகிறது என்றால், இதற்கான உள்ளக பாகங்கள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும்?
ஆன்லைன் இல் காணப்படும் கருத்து கணிப்புக்களின் படி இந்த ஸ்மார்ட் போனை தயாரிப்பதற்கான உள்ளக பாகங்கள், சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதோடு இந்த பாகங்கள் உபயோகிப்பதற்கு உகந்ததல்ல என்று கூறப்படுகிறது. அதாவது Expire ஆகிய உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து தயாரித்து இருக்க வேண்டும்.
உண்மையிலேயே இந்த நிறுவனம் நம்பிக்கைக்குரிய ஒரு நிறுவனமா?
ஆன்லைன் இல் காணப்படும் வாடிக்கையாளர் கருத்துக்களின் படி இந்த நிறுவனத்தின் முன்னைய தயாரிப்பான 3000 ரூபாய் பெறுமதியான ஹெட்செட்-ஐ பணம் செலுத்தி வாங்கிய பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய பொருள் இன்றுவரை
சென்றடையவில்லை.
அது குறித்த வாடிக்கையாளர் கருத்துக்களை கீழே காணலாம்.
நீங்கள் ஆன்லைன் பூகிங் செய்ய போகும் இவர்களது இணையத்தளம் நம்பிக்கைக்குரியதா?
நீங்கள் பணம்செலுத்தி உங்களது ஸ்மார்ட் போனை வாங்கப்போகும் இவர்களுடைய இணையத்தளம் ஒரு சில நாட்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களுடைய தனிநபர் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
இங்கே கிளிக் செய்து அவர்களுடைய இணையத்தளத்தை பார்வையிடலாம்.
இவ்வாறு பல்வேறு சந்தேகங்களை எம்முடைய மனதில் உருவாக்கி இருக்கும் இந்த ஸ்மார்ட் போன் விற்பனையானது ஆன்லைன் இல் நடைபெறப்போகும் மற்றுமொரு ஏமாற்று வேலையாக இருக்குமா என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
வெறும் 251 ரூபாய் தானே. போனால் போகட்டும் என்று நினைத்து ஆன்லைன் பூகிங் செய்யப்போகும் நண்பர்களே... உங்களைப்போல் பல கோடி மக்கள் இந்த ஸ்மார்ட் போனை வாங்கப்போகிறார்கள். அப்படி என்றால் குறிப்பிட்ட நிறுவனம் பெற்றுக்கொள்ள போகும் வருமானத்தை நினைத்து பாருங்கள்.
Tech in Tamil
Tech News
இந்தியாவில் 251 ரூபாய்க்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்.. இது மற்றுமொரு ஆன்லைன் ஏமாற்று வேலையா?

