போனில் ஸ்க்ரீன்-ஐ Unlock செய்யாமல் (பின்புலத்தில்) வீடியோ ரெகார்டிங் செய்வது எப்படி?

பல்வேறு வசதிகளுடன் வரும் இன்றைய ஸ்மார்ட் போன்களில் எமக்கு தேவையான அனைத்தையுமே செய்து கொள்ள கூடியதாய் இருக்கிறது. ஸ்மார்ட் போனில் அழைப்புக்களை மேற்கொள்வது முதல் இணையத்தை அணுகுவது என்று எம்முடைய அனைத்து தொழிநுட்ப தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள கூடியதாய் இருக்கிறது.

ஆகவே இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட ஒரு அருமையான விடயத்தை பார்ப்போம். இன்று சந்தைக்கு வரும் ஸ்மார்ட் போன்கள் நல்ல தரமான வீடியோ ரெகார்ட் செய்யும் வசதியுடன் வருகிறது.

இவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் காணப்படும் வீடியோ ரெகார்டிங் வசதியானது, எம்முடைய பல்வேறுபட்ட நினைவுகளை சேமித்து வைக்க உதவுகிறது. நம் அனைவருக்குமே தெரிந்தது போல் எமது ஸ்மார்ட் போனில் கேமரா-வை திறந்து வீடியோ ரெகார்டிங்-ஐ தெரிவு செய்தால், எமக்கு தேவையான அனைத்து காட்சிகளையும் ரெகார்ட் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


ஆனால் இப்படி சாதரணமாக முறையில் வீடியோ-களை ரெகார்ட் செய்யாமால் சற்று வித்தியாசமாக எப்படி ரெகார்ட் செய்வது என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.

சில சமயங்களில் உங்களுக்கு தேவையான காட்சியை யாருக்கும் தெரியாதவாறு ரெகார்ட் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

இவ்வாறான நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போனை Unlock செய்யாமல் உங்களுக்கு தேவையான காட்சியை ரெகார்ட் செய்து கொள்ள முடியும். இதை எப்படி செய்து கொள்வது என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க கீழே வழங்கப்பட்டுள்ள அன்றொஇட் செயலி எமக்கு உதவுகிறது.

அன்றொஇட் செயலி

இந்த செயலியை உங்களது அன்றொஇட் போனில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
நிறுவிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஒரு முறை கிளிக் செய்து ஆரம்பித்து விட்டால், மறுநொடியில் இருந்து அனைத்து காட்சிகளும் ரெகார்ட் ஆக தொடங்கிவிடும்.

அதன் பின்னர், உங்களது ஸ்மார்ட் போனில் ஸ்க்ரீன்-ஐ லாக் செய்து விடுங்கள். வீடியோ ரெகார்டிங் ஆனது, பின்புலத்தில் தனது வேலையை செய்து கொண்டு இருக்கும்.

ரெகார்ட் ஆகி கொண்டு இருக்கும் வீடியோவை நிறுத்த வேண்டும் என்றால், மறுபடியும் உங்களது ஸ்மார்ட் போனை Unlock செய்து விட்டு, குறிப்பிட்ட செயலியின் மீது கிளிக் செய்யுங்கள்.

இப்போது ரெகார்ட் ஆகி கொண்டிருக்கும் வீடியோ நிறுத்தப்படும்.

இந்த செயலியை பயன்படுத்தி முன், பின் என்று ஸ்மார்ட் போனில் காணப்படும் இரண்டு கேமரா மூலமும் ரெகார்டிங் செய்து கொள்ள முடியும்.

குறிப்பு

இந்த பதிவை கல்வி சார்ந்த அறிவிற்காகவே  எழுதி உள்ளேன். தயவு செய்து இந்த செயலியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.