அன்றொஇட் போனில் 2G மற்றும் 3G வேகத்தை அதிகரிப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் மூலம் இணையத்தை உபயோகிக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை தான் இணைய வேகம். நீங்கள் இணையத்தை வைபை இணைப்புகளின் மூலம் ஸ்மார்ட் போனில் இருந்து உபயோகிக்கிறீர்கள் என்றால் எந்த பிரச்சினையும் வராது. உங்களது இணைய வேகமானது பெரும்பாலும் சீராகவே காணப்படும். ஆனால் நீங்கள் இணையத்தை உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து டேட்டா மூலம் உபயோகிக்கிறீர்கள் என்றால் கட்டாயமாக இணைய வேகத்தில் ஒவ்வொரு முறையும் மாற்றத்தை உணர்வீர்கள்.


ஏற்கனவே எம்முடைய தளத்தில் ஸ்மார்ட் போன்களில் கூகுளின் அதிவேக DNS-ஐ உபயோகித்து இணைய வேகத்தை எப்படி அதிகரித்து கொள்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் தவறவிட்டு இருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

கூகுளின் அதிவேக DNS-ஐ உபயோகித்து உங்கள் ஸ்மார்ட் போன்களின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?


ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஸ்மார்ட் போனில் டேட்டா மூலம் இணையத்தை உபயோகிக்கும் போது எப்படி இணைய வேகத்தை அதிகரித்து கொள்வது என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலிகள்.
இந்த செயலிகளை பயன்படுத்தி உங்களது 2G மற்றும் 3G வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களின் இணைய வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ள முடியும்.

உங்களுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனில் 2G வசதி மட்டுமே காணப்படுமேயானால் கீழே வழங்கப்பட்டிருக்கும் அன்றொஇட் செயலி மூலம் உங்களது இணைய வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

அன்றொஇட் செயலி 1

உங்களுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனில் 2G மற்றும் 3G வசதி
காணப்படுமேயானால் கீழே வழங்கப்பட்டிருக்கும் அன்றொஇட் செயலி மூலம் உங்களது இணைய வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

அன்றொஇட் செயலி 1
அன்றொஇட் செயலி 2
அன்றொஇட் செயலி 3


பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே இந்த செயலிகளை பயன்படுத்தி உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் இணைய வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ள முடியும். இந்த செயலிகள் மூலம் உங்களது இணைய இணைப்பு வேகமானது இமாலய அளவுக்கு அதிகரிக்காவிட்டாலும் கட்டாயமாக முன்னர் இருந்ததிலும் பார்க்க அதிகரிக்கப்படும்.

இந்த செயலிகள் மூலம் உங்களது இணைய இணைப்பு வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ள இந்த செயலிகளை உபயோகிக்க முன்னர், உங்களது இணைய டவுன்லோட் வேகத்தை பரிசீலித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து இந்த செயலிகளை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவிய பின்னர்,
உங்களது இணைய டவுன்லோட் வேகத்தை பரீட்ச்சித்து பாருங்கள்.
கண்டிப்பாக இணைய வேகத்தில் மாற்றம் இருப்பதை உங்களால் அவதானிக்க கூடியதாய் இருக்கும்.