அன்றொஇட் போனில் எந்தவிதமான Apps-ம் இல்லாமல் அனிமேஷன் GIF-களை உருவாக்கி பேஸ்புக்கில் ஷேர் செய்வது எப்படி?

உலகின் மிகப்பிரபல்யமான சமூக வைலத்தலமான பேஸ்புக், நாளுக்கு நாள் தன்னுடைய பயனர்களை கவர்வதற்காக ஏதேனும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. இவ்வாறு கடந்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய வசதி தான் இந்த அனிமேஷன் போட்டோ-களை எமது பேஸ்புக் கணக்கில் ஷேர் செய்யும் வசதி.

இந்த புதிய வசதியானது பேஸ்புக் உபயோகிக்கும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகவும் வரவேற்பை பெற்று உள்ளது.

இதை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனமானது எங்களுடைய Profile போட்டோ-விற்கு அனிமேஷன் படங்களை உபயோகிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதியை உங்களுடைய பேஸ்புக் Profile-ல் எப்படி செயற்படுத்தி கொள்வது என்ற பதிவை ஏற்கனவே எமது தளத்தில் கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் அனிமேஷன் ப்ரோபைல் பிக்சர் வசதி

ஆகவே இன்றைய பதிவில் இந்த அனிமேஷன் போட்டோ-கள் உருவாக்குவது சம்மந்தமான ஒரு தகவலை தரலாம் என்று நினைக்கின்றேன்.


ஒரு சில நாட்களுக்கு முன்னர், எமது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் செயலிகளை பயன்படுத்தி எம்முடைய செல்பி-களை எப்படி அழகான அனிமேஷன் போடோகளை உருவாக்குவது என்று கூறி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களது Selfie போட்டோகளை அனிமேஷன் GIF போட்டோ ஆக மாற்றுவது எப்படி?

ஆனால் இன்றைய பதிவில் எந்த விதமான செயலிகளும் இன்றி எம்முடைய அன்றொஇட் ஸ்மார்ட் போன் மூலம் எப்படி அனிமேஷன் போட்டோ-களை உருவாக்கி எம்முடைய பேஸ்புக் கணக்கில் ஷேர் செய்வது என்று கூறுகிறேன்.

முதலாவதாக உங்களது அன்றொஇட் போனில் Gallery-க்கு செல்லுங்கள்.

அடுத்து கேமரா ஆல்பம்-ஐ தெரிவு செய்யுங்கள்.

அதிலே மேலே வலது மூலையில் இருக்கும் செட்டிங்-ஐ கிளிக் செய்து அதிலே Create a GIF File என்று இருப்பதை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து நீங்கள் அனிமேஷன் போடோவாக மாற்ற நினைக்கும் உங்களது போடோகளை தெரிவு செய்து Done என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து அனிமேஷன் போட்டோ ப்லே ஆக வேண்டிய நேர இடைவெளி மற்றும் தரம் என்பவற்றை தெரிவு செய்து மேலே வலது மூலையில் இருக்கும் Save என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது அழகான அனிமேஷன் போட்டோ தயாராகி Gallery-யில் காணப்படும்.



பரிந்துரைக்கப்படும் பதிவு



இப்போது இதை எப்படி உங்களது பேஸ்புக் கணக்கில் ஷேர் செய்வது என்று பார்ப்போம்.
உங்களது அன்றொஇட் போனில் இருந்து கீழே குறிப்பிட்டுள்ள தளத்திற்கு செல்லுங்கள்.

postimage.org

குறிப்பு 
postimage தளமானது தற்காலிகமாக செயலிழந்து இருப்பதால் இந்த தளத்துக்கு எம்மால் போக முடியாமல் உள்ளது. நான் இந்த பதிவை எழுதும் போது, குறிப்பிட்ட தளமானது சீராக இயங்கி கொண்டு இருந்தது. கவலைப்பட வேண்டாம் நண்பர்களே. இந்த தளத்திற்கு மாற்றீடாக கீழே குறிப்பிட்டு தளங்களை உபயோகித்து உங்களது அனிமேஷன் போடோகளை பேஸ்புக்கில் ஷேர் செய்யலாம்.

pictr
imgsafe

மேலே குறிப்பிட்ட தளங்களிலும் postimage தளத்தில் செய்ய வேண்டிய அதே செயன்முறையை பின்பற்றி தான் உங்களது அனிமேஷன் போடோகளை பேஸ்புக்கில் ஷேர் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து கீழே காட்டப்பட்டிருப்பது போல் Browse என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து உங்களுடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் அனிமேஷன் போட்டோவை தெரிவு செய்து Done என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து Family Safe என்பதை கிளிக் செய்து Upload என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து Direct Link என்று இருப்பதில் காணப்படும் லின்க்கை Copy செய்யுங்கள்.

Copy செய்த லின்க்கை உங்களது பேஸ்புக் Profile-ல் Paste செய்யுங்கள்.


சிறிது நேரத்தில் நீங்கள் உருவாக்கிய அனிமேஷன் போட்டோ உங்களது Profile-ல் தோன்றும்.

அடுத்து குறிப்பிட்ட அந்த லின்க்கை அகற்றி விட்டு போஸ்ட் செய்யுங்கள். பின்னர், ஒரு முறை உங்களது Profile-ஐ Refresh செய்து விட்டு பாருங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்களுடைய அழகிய அனிமேஷன் போட்டோ தயாராகிவிட்டது. பதிவு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.