மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் எம்முடைய உறவினர் நண்பர்களை தொடர்பு கொள்ள உதவும் இந்த சேவைகள், பல்வேறு பயனுள்ள வசதிகளை எமக்கு வழங்குகிறது.
இந்த அனைத்து சேவைகளும் தமது பயனர்களுக்கு வழங்கும் பொதுவான ஒரு சேவையாக, நீங்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அவர் படித்து விட்டாரா என்பதை தெரிந்து கொள்வதும், அப்படி அவர் எமது செய்தியை படித்து விட்டால், அந்த செய்தி எப்போது படிக்கப்பட்டது என்ற நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதியையும் குறிப்பிடலாம்.
இந்த வசதியானது மிகவும் பயனுள்ள ஒன்றாக காணப்படுகின்ற போதிலும், சில சமயங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு தகவலை படித்தது அனுப்பியவருக்கு தெரியக்கூடாது என்ற ஒரு தேவை ஏற்படலாம்.
விபர்-இல் 'மெசேஜ் சீன்' வசதியை மறைப்பது எப்படி ?
உங்களது ஸ்மார்ட் போனில் வைபர் செயலியை ஆரம்பியுங்கள்.அதிலே Settings-இற்கு செல்லுங்கள்.
அங்கே Privacy என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Send 'Seen' Status என்று இருப்பதில் காணப்படும் டிக்-ஐ நீக்கி விடுங்கள்.
வாட்ஸ்அப்-இல் 'மெசேஜ் சீன்' வசதியை மறைப்பது எப்படி?
உங்களது வாட்ஸ்அப் கணக்கை திறவுங்கள்.அதிலே கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையுங்கள்.
Settings > Account > Privacy
அங்கே Read receipts என்று இருப்பதில் போடப்பட்டிருக்கும் டிக்கை நீக்கி விடுங்கள்.
பேஸ்புக்-இல் 'மெசேஜ் சீன்' வசதியை மறைப்பது எப்படி?
பேஸ்புக் மெசேஜ் சீன்-ஐ மறைக்க இரண்டு வழிகள் உள்ளது. நீங்கள் கூகுள் க்ரோம் மூலமாக பேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறிப்பிட்ட சில Extension-களை பயன்படுத்தி மெசேஜ் சீன்-ஐ மறைக்க முடியும்.கீழே வழங்கப்பட்டிருக்கும் கூகுள்-க்கான சிறப்பு Extension-களை உங்களது உலாவியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
கூகுள் க்ரோம் Extension
அடுத்த வழிமுறையானது மிகவும் இலகுவானதாகும்.
குறிப்பிட்ட ஒருவரின் செய்தியை நீங்கள் படித்து முடித்த பின்னர், உங்களது பேஸ்புக் கணக்கில் 'Message' இற்கு சென்று குறிப்பிட்ட நண்பருடைய மெசேஜ்-ஐ திறவுங்கள்.
அடுத்து மெசேஜ் Settings-இல் காணப்படும் Mark as Unread என்பதை கிளிக் செய்வதன் மூலம், ஏற்கனவே நீங்கள் படித்த செய்தியை படிக்காதது போல் மாற்றிக்கொள்ள முடியும்.
எம்முடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களின் ஊடக உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


