உங்கள் அன்றொஇட் போனை ஐ-போன் போல மாற்றி அதன் வசதிகளை பெறுவது எப்படி?

இன்று நம் அனைவருமே எதாவது ஒரு ஸ்மார்ட் போனை வைத்து இருக்கிறோம். ஸ்மார்ட் போன்களின் தேவையானது இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக மாறி விட்டது. இந்த ஸ்மார்ட் போன்களானது இன்று எமது தேவைகளை பல்வேறு வகையில் இலகுவாக்கி உள்ளது. எம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலம் வீட்டு மின்சார கட்டணம் செலுத்துவது முதல் எமது வங்கி கணக்கு மிகுதியை சரி பார்த்து கொள்வது வரை அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள கூடியதாய் உள்ளது.

கோடிக்கணக்கான ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருப்பது அன்றொஇட் மற்றும் ஐபோன் ஆகும். இன்றைய தொழிநுட்ப உலகில் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் தனக்கென்று  தனி இடத்தை பிடித்து உள்ளது. அன்றொஇட் மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களினதும் வசதிகள் ஒன்றுக்கொன்று முழுமையாக வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆகவே இன்றைய கால கட்டத்தில் இருக்கும் நாம் எமது தேவைக்கு ஏற்ற போல் ஐபோன் அல்லது அன்றொஇட் போன் ஒன்றை வைத்து உள்ளோம்.

ஆகவே இன்றைய பதிவில் அன்றொஇட் மற்றும் ஐபோன் பாவனையாளர்களை ஒன்றிணைக்கும் வகையிலான ஒரு பதிவை தரலாம் என்று நினைக்கின்றேன்.

எம் அனைவருக்குமே தெரிந்தது போல், அன்றொஇட் மற்றும் ஐபோன் ஆகிய இரண்டினதும் கட்டமைப்புக்கள், மெனு செட்டிங்க்ஸ் ஒன்றுக்கொன்று முழுமையாக வேறுபட்டது. ஆகவே இன்றைய பதிவில் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை  ஐபோன் போல எப்படி மாற்றிக்கொள்வது என்று கூறுகிறேன்.

எமது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ஐபோன் போல மாற்றிக் கொள்வதற்கு அன்றொஇட்-க்கான சிறப்பு செயலிகள் உதவுகிறது.
One Launcher செயலி

இந்த இலவச செயலியை எமது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிருவிக்கொல்வதன் மூலம் எமது அன்றொஇட் போனில் தோற்றத்தை ஐபோன் போல மாற்றிக்கொள்ளலாம். இந்த செயலி மூலம் எம்முடைய அன்றொஇட் போனின் மெனு மற்றும் குறிப்பிட்ட சில செட்டிங்-களை ஐபோனை போன்றே மாற்றி கொள்ள முடியும். இந்த செயலியை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனிற்கு இங்கே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இலவசமாக பெற்று கொள்ளலாம்.



பரிந்துரைக்கப்படும் பதிவு



ILocker செயலி

அன்றொஇட் ஸ்மார்ட் போன்களுக்கான இந்த செயலியை பயன்படுத்தி உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் முகப்பை ஐபோன் போல மாற்றிக்கொள்ள முடியும். இந்த செயலியை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்க வேண்டுமென்றால் இங்கே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.


இந்த செயலிகளை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி உங்களது ஸ்மார்ட் போன் மெனு மற்றும் லாக் ஸ்க்ரீன்-ஐ ஐபோன் போல அழகாக மாற்றிக்கொள்ள முடியும்.