ஏற்கனவே எமது தளத்தில் இந்த ஸ்மார்ட் போனில் காணப்படும் காணப்படும் வசதிகளும் இந்த ஸ்மார்ட் போன் குறிப்பான ஆன்லைன் கருத்துக்களையும் பகிர்ந்து இருந்தோம்.
அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் 251 ரூபாய்க்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்.. இது மற்றுமொரு ஆன்லைன் ஏமாற்று வேலையா?
ஒரு ஸ்மார்ட் போனுக்குண்டான அனைத்து வசதிகளுடனும் வெறும் 251 ரூபாய்க்கு ஒரு போன் கிடைக்கிறது என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள்?
இந்த ஸ்மார்ட் போன் பொதுமக்களிடையே பெரிதும் கவரப்பட காரணம் 251 ரூபாய் விலையும் அதற்கு குறிப்பிட்ட நிறுவனம் வழங்கப்போகும் ஸ்மார்ட் போன் வசதிகளுமே.
ஆகவே குறிப்பிட்ட நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனில் வழங்கப்போகும் வசதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.
1 GB ரெம் இருக்கிறது என்று கூறினார்கள். ரெம்-ன் வேகம் என்ன என்று கூறவே இல்லை.
அனைத்து ரெம் மெமரி-களுக்கும் என்று ஒரு குறிப்பிட்ட வேகம் இருக்கிறது. அதை வைத்தே உங்களது ஸ்மார்ட் போனின் வேகம் தீர்மானிக்கப்படும். ஐபோனில் காணப்படும் 1 GB ரெம்-இற்கும் லாவா போனில் காணப்படும் 1 GB ரெம்-இற்கும் வித்தியாசம் இருக்கின்றது. இதானால் தான் ஒரே அளவான ரெம்-ஐ கொண்டிருந்தாலும் ஐபோன் வேகமாகவும் லாவா போன் சற்று மெதுவாகவும் செயற்படுகிறது.
அதே போன்று 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் ரெம் வேகம் எப்படி இருக்க போகிறது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
1.3 GHz quad code ப்ரோசெஸ்சர் என்று கூறினார்கள். ஆனால் இந்த ப்ரோசெஸ்சர்-இன் தரம் என்ன?
ப்ரோசெஸ்சர்-இல் பல்வேறு தரங்கள் காணப்படுகின்றன. சாம்சுங் போனில் காணப்படும் 1.3 GHz quad code ப்ரோ செஸ்சர்-இக்கும் மைக்ரோ மக்ஸ் போனில் காணப்படும் 1.3 GHz quad code ப்ரோசெஸ்சர்-இக்கும் தரத்தில் வித்தியாசம் உள்ளது.
அந்த வகையில் இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போன் ப்ரோசெஸ்சர் என்ன தரத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட நிறுவனத்தினர் பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை.
அன்றொஇட் 5.1 இயங்குதளம்.
இந்த ஸ்மார்ட் போனில் கவரப்பட்ட மற்றுமொரு விடயம் அன்றொஇட் 5.1 இயங்குதளம். அன்றொஇட் 5.1 இயங்குதளம் சிறப்பாக ஒரு ஸ்மார்ட் போனில் செயற்பட வேண்டும் என்றால், குறிப்பிட்ட ஸ்மார்ட் போனில் ப்ரோசெஸ்சர் மற்றும் ரெம் சிறந்த தரத்தில் இருக்க வேண்டும்.
ஆகவே இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போனில் அன்றொஇட் 5.1 இயங்குதளம் சிறப்பாக செயற்படுமா என்பது கேள்விக்குறியே..
உலகிலேயே தரம் குறைந்த ஸ்மார்ட் போன் களை தயாரிப்பது சீனா தான். அதை மிஞ்சி விட்டார்கள் நம்மவர்கள்.
சீனா நாட்டு தரம் குறைந்த ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் செய்யும் போது வெடிப்பதும் அல்லது அதிகமாக ஹீட் ஆகி வெடித்து விபத்து சம்பவங்கள் நடைபெறுவதும் நாம் தினம்தோறும் இணையத்தில் படிக்கும் ஒரு செய்தியாக மாறி விட்டது.
அப்படி என்றால் சீனா நாட்டு தயாரிப்புக்களை விட குறைந்த தரத்தில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போனில் நிலை என்னவாக இருக்கும்?
பேட்டரி வெறும் 1450 mAh தான்.
ஆகவே இந்த ஸ்மார்ட் போனில் எவ்வளவு நேரத்திற்கு சார்ஜ் ஸ்மார்ட் ஆக இருக்கும் என்பது கேள்விக்குறியே.
ஷிப்பிங் செய்ய எதற்கு 4 மாதங்கள்?
ஏற்கனவே எமது முன்னைய பதிவில் கூறியது போல, ஆன்லைன் இல் காணப்படும் வாடிக்கையாளர் கருத்துக்களின் படி இந்த நிறுவனத்தின் முன்னைய தயாரிப்பான 3000 ரூபாய் பெறுமதியான ஹெட்செட்-ஐ பணம் செலுத்தி வாங்கிய பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய பொருள் இன்றுவரை சென்றடையவில்லை.
ஆகவே 4 மாதங்களின் பின்னர் உங்களுடைய ஸ்மார்ட் போன் டெலிவர் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியே.
தமிழ் நாட்டையே உலுக்கிய வெள்ளத்தை சிம்புவின் பீப் பாடல் ஒரே வாரத்தில் மறக்கடித்தது. 4 மாதங்களின் பின்னர் யார் தான் இந்த 251 ரூபாவை நினைவில் வைத்து இருக்க போகிறார்கள் என்பது இவர்களுடைய கோட்பாடாக இருக்குமோ?
