இணையத்தை தினம் தோறும் வளம் வந்து கொண்டிருக்கும் நாம், இணையத்திலே பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம்.
எமது வாழ்க்கையில் இருந்து குறிப்பிட்ட ஒரு நாளை எடுத்து பார்த்தோமேயானால், எமது நாளில் இணையத்தின் பங்கானது பாரிய செல்வாக்கை செலுத்துகிறது. உதாரணமாக எமக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை பார்வையிட, சமூக வலைத்தளங்களை நாட என்று பல்வேறு காரணங்களுக்காக நாம் இன்று இணையத்தை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
இப்படி இணையத்தில் நாம் உபயோகிக்கும் பெரும்பாலான தளங்களில் தனியாக கணக்கொன்றை திறந்து அதற்கான கடவுச்சொல்லை நினைவில் வைத்து இருக்கிறோம். உதாரணமாக பேஸ்புக், ஜிமெயில் போன்றவற்றை கூறலாம்.
இப்படி பல்வேறு பட்ட தளங்களில் எமது கணக்குகளை திறந்து உபயோகிக்கும் போது ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சினை தான், எமது Username மற்றும் கடவுச்சொல்லை சரியாக நினைவில் வைத்து கொள்வது.
இந்த பிரச்சினையை சரி செய்ய ஒரு சிலர், தமது அனைத்து கடவுச்சொல்லையும் எங்காவது குறித்து வைத்து கொள்கிறார்கள். ஆனால் இந்த முறை அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.
ஆகவே இன்றைய பதிவில் உங்களது அனைத்து கடவுச்சொல்லையும் ஒரே இடத்தில் வைத்து எப்படி மிக இலகுவாக கையாள்வது என்று கூறுகிறேன்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிப்பதட்காகவே Keepass எனும் மென்பொருள் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. இந்த மென்பொருளை கணனியில், அன்றொஇட் மற்றும் இபோனே என்று அனைத்து விதமான டிவைஸ்-களில் இருந்தும் உபயோகித்து கொள்ளலாம்.
உங்களது அனைத்து Username மற்றும் கடவுச்சொல் போன்றவைகளை இந்த மென்பொருளில் ஒரு Database File ஆக உருவாக்கி அந்த File-இற்கு சிறப்பு கடவுச்சொல் (Master Password) ஒன்றை உருவாக்கி உபயோகிக்கலாம்.
மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளலாம்.
உதாரணமாக இந்த செயலியை கணனியில் இருந்து எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.
தரவிறக்கிய செயலியை கணனியில் நிறுவுங்கள்.
நிறுவிய செயலியை உங்களது கணனியில் ஆரம்பியுங்கள்.
அடுத்து File என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே New என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது உங்களுடைய அனைத்து கடவுச்சொட்களையும் சேமித்து வைக்க போகும் Database File-ஐ உருவாக்குங்கள்.
இந்த File-ஐ கணனியில் சேமிக்கும் போது, இந்த File-க்கான மாஸ்டர் Password-ஐ வழங்குங்கள். அடுத்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களுடைய Database File ஆனது உருவாக்கப்பட்டு விட்டது.
அடுத்து உங்களது மாஸ்டர் Password-ஐ வழங்கி உருவாக்கப்பட்ட File-ஐ திறவுங்கள்.
இப்போது இந்த மாஸ்டர் File-இனுள் கீழே காட்டப்பட்டிருப்பது போல் உங்களது அனைத்து கடவுச்சொட்களையும் தனித்தனியாக அனைத்து விபரங்களுடனும் சேமித்து வைத்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாது இந்த மென்பொருளானது குழுக்களாக கடவுச்சொல்லை பிரித்து வைத்து கொள்வது என்று மேலும் பல வசதிகளை தருகிறது.
இதே போன்ற Database File-களை உங்களது ஸ்மார்ட் போன் மூலமும் உருவாக்கி அதற்கான மாஸ்டர் கடவுச்சொல் ஒன்றை வழங்கி சேமித்து வைத்து கொள்ள முடியும். Database File-ஐ உங்களது ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்து கொள்ள விருப்பமில்லை என்றால், நேரடியாக உங்களது கூகுள் டிரைவ்-இல் சேமித்து வைக்கும் வசதியையும் தருகிறது இந்த பயனுள்ள மென்பொருள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு Open Source மென்பொருளாகும். ஆகவே உங்களது கடவுச்சொற்கள் கலவாடப்படுவதட்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.


