இன்று மற்றுமொரு ஆர்வமான பதிவொன்றுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே எம்முடைய தளத்தில் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை உபயோகித்து எப்படி வை-பை கடவுச்சொல்லை கண்டு பிடிப்பது என்று கூறி இருந்தேன். அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தந்துள்ளேன்.
ஸ்மார்ட் போன் மூலம் இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு விடயம் தான் வை-பை. நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து இணையத்தை உபயோகிக்க வை-பை இணைப்புக்களை உபயோகிப்பதால் பல நன்மைகள் உண்டு.
இதிலே குறிப்பிட்ட சில நன்மைகளாக, எமது ஸ்மார்ட் போனில் பேட்டரி சார்ஜ் வீணடிக்கப்படாமல் இருப்பது, அதே போல் கட்டுப்பாடற்ற இணைய உபயோகம் போன்றவைகளை கூறலாம்.
இந்த பதிவின் தொடர்ச்சியை கீழே உள்ள லின்க்கில் சென்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
அன்றொஇட் போன் மூலம் வை-பை பாஸ்வேட்-ஐ கண்டு பிடிப்பது எப்படி?
ஆகவே இன்றைய பதிவும் உங்களது வை-பை பசியை போக்கி கொள்ள கூடிய மாதிரியாக அமைய போகிறது.
அதாவது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனிற்கு கிடைக்க கூடிய வை-பை சிக்னல்-ஐ ஹேக் செய்து அதனுடைய கடவுச்சொல்லை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
குறிப்பிட்ட ஒரு Forum-ஐ வாசிக்கும் போதே எனக்கு இந்த தகவல் கிடைத்தது. அதன் பின்னர் இந்த முறையை பயன்படுத்தி எனது அலுவலக வை-பை கடவுச்சொல்லை எப்படி தெரிந்து கொண்டேன் என்பதை கீழே விளக்கமாக கூறியுள்ளேன்.
குறிப்பு
உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் வர்ஷேன் 5.0 (Lollipop) அல்லது அதற்கு மேற்பட்டது என்றால் இந்த செயலியை பயன்படுத்த உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க தேவையில்லை. ஆனால் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் வர்ஷேன் அதை விட குறைவானது (Kitkat) என்றால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
அன்றொஇட் போனை ரூட் செய்வது எப்படி என்று ஏற்கனவே எமது தளத்தில் 2 பதிவுகளை எழுதி இருந்தேன். அந்த பதிவுகளை கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
அன்றொஇட் போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?
அன்றொஇட் போனை ரூட் செய்வதற்கான 12 சிறந்த செயலிகள் (அனைத்து போன் மாடல்களுக்கும்)
முதலாவதாக ப்லே ஸ்டோரிட்கு சென்று கீழே படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருடைய செயலியை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
இந்த செயலியை நிறுவிய பின்னர், அதை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.
அடுத்து மேலே வலது மூலையில் காணப்படும் Scan-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது போனிற்கு கிடைக்க கூடிய அனைத்து வை-பை நெட்வொர்க்-களினதும் பெயரை பட்டியலிட்டு காட்டும்.
பட்டியலிலே ஹேக் செய்யக்கூடிய நெட்வொர்க்-களை பச்சை நிறத்திலும் ஹே க் செய்ய முடியாத நெட்வொர்க்-களை சிவப்பு நிறத்திலும் காட்டும்.
இப்போது பச்சை நிறத்தில் காட்டக்கூடிய எனது அலுவலக வை-பை நெட்வொர்க் ஒன்றின் கடவுச்சொல்லை எப்படி தெரிந்து கொண்டேன் என்று பார்ப்போம்.
குறிப்பிட்ட வை-பை நெட்வொர்க்-ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே காட்டப்பட்டிருப்பது போல் "ஆடோ பின்" என்று இருப்பதில் கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது குறிப்பிட்ட அந்த வை-பை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை உங்களால் பார்க்க கூடியதாய் இருக்கும்.
"ஆட்டோ பின்" வேலை செய்யவில்லை என்றால் "மனுஅல் பின்" என்று இருக்கும் வசதியை உபயோகித்து முயற்ச்சித்து பாருங்கள்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
குறிப்பிட்ட ஒரு "மனுஅல் பின்" ஆல் அந்த வை-பை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அடுத்த பின்-ஐ உங்களுக்கு பரிந்துரைக்கும். அதை உபயோகித்து வை-பை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
இந்த செயலி மூலம் குறிப்பிட்ட வை-பை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் கீழே காட்டியிருப்பது போல் ஒரு வாசகம் தோன்றும்.
உங்கள் நண்பருடைய வாட்ஸ்அப்-ஐ ஹேக் செய்யக்கூடிய ட்ரிக்
உங்கள் நண்பருடைய வாட்ஸ் அப் கணக்கை அவருக்கு தெரியாமல் எப்படி ஹே க் செய்வது என்பதற்கான ஒரு சிறிய ட்ரிக் -ஐ ஏற்கனவே எமது தளத்தில் எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் நண்பருடைய வாட்ஸ்அப்-ஐ ஹேக் செய்வது எப்படி?
குறிப்பு
இந்த பதிவு கல்வி சார்ந்த அறிவுக்காகவே எழுதப்பட்டுள்ளது. இந்த முறையை எந்த விதமான தவறான வழியிலும் உபயோகிக்க வேண்டாம் என்று "டெக் இன் தமிழ்" தளம் உங்களை கேட்டு கொள்கிறது.
Tech in Tamil
Android
Tips and Tricks
உங்களுக்கு தெரியாத வை-பை நெட்வொர்க்-கினுடைய பாஸ்வேர்ட்-ஐ தெரிந்து கொள்ள உதவும் அருமையான அன்றொஇட் செயலி







