அன்றொஇட் போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி? போனில் இருந்தே இலகுவாக ரூட் செய்து கொள்ளலாம்.
ஆகவே இன்றைய பதிவில் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்வதற்கான சிறந்த செயலிகளை பரிந்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
ரூட் செய்வதற்கு முன்னர் நீங்கள் அன்றொஇட் ரூட் பற்றிய அறிவையும் அதனது நன்மை தீமைகளை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
ஏற்கனவே அன்றொஇட் போனை ரூட் செய்வதன் நன்மை தீமைகளை பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தந்துள்ளேன். ஆகவே உங்களால் அன்றொஇட் ரூட் பற்றிய அடிப்படை அறிவை பெற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கும்.
அன்றொஇட் ரூட்டிங் என்றால் என்ன?
அன்றொஇட் ரூட்டிங் என்றால், உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனிட்கான Super User Access-ஐ வழங்குவதாகும்.அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை செய்து கொள்ள முடியும். உங்களது அன்றொஇட் போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக Custom Software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் பேட்டரி நீடிப்பு, OS Upgrade என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
அன்றொஇட் போனை ரூட் செய்வதன் நன்மை தீமைகளை பற்றி முழுமையாக அறிய கீழே தரப்பட்டுள்ள பதிவை வாசிக்கவும்.
அன்றொஇட் போனை ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?
ஆகவே உங்களது அன்றொஇட் போனை இரு முறை மூலம் ரூட் செய்து கொள்ளலாம். முதலாவதாக உங்களது கணனியில் அன்றொஇட் ஸ்மார்ட் போனை கேபிள் மூலம் இணைத்து ரூட் செய்யலாம். அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனில் இருந்த படியே நேரடியாக ரூட் செய்யலாம்.
உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்து கொள்வதற்கான சிறந்த 10 செயலிகளை கீழே தந்துள்ளேன். இவற்றை பயன்படுத்தி உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை நேரடியாக ஸ்மார்ட் போனில் இருந்தோ அல்லது உங்களது கணனியில் இருந்தோ ரூட் செய்து கொள்ள முடியும்.
1) i-ரூட்
அன்றொஇட் போன் மற்றும் கணணி ஆகிய இரண்டிலிருந்தும் இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
2) Frama-ரூட்
அன்றொஇட் போனில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
3) ரூட் மாஸ்டர்
அன்றொஇட் போனில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
4) Z4 ரூட்
அன்றொஇட் போனில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
5) And-ரூட்
அன்றொஇட் போனில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
6) ரூட் அன்றொஇட்
அன்றொஇட் போனில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம். பரிந்துரைக்கப்படும் ஒரு செயலி. பெரும்பாலும் அனைத்து விதமான அன்றொஇட் போன்களிலும் ரூட் செய்யும் வேலையை சிறப்பாக செய்து முடிக்க உதவுகிறது.
இந்த செயலியை நேரடியாக ப்லே ஸ்டோரில் இருந்தே தரவிறக்கி கொள்ளலாம்.
7) Towel-ரூட்
அன்றொஇட் போன் மற்றும் கணணி ஆகிய இரண்டிலிருந்தும் இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
8) Baidu-ரூட்
அன்றொஇட் போன் மற்றும் கணணி ஆகிய இரண்டிலிருந்தும் இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
9) கிங்-ரூட்
அன்றொஇட் போன் மற்றும் கணணி ஆகிய இரண்டிலிருந்தும் இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
10) ரூட் ஆல் டிவைஸ்
அன்றொஇட் போனில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொள்ளலாம்.
11) Wondershare MobileGo
கணனியில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொல்லலாம்.
12) ரூட்-Genius
கணனியில் இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் ரூட் செய்து கொல்லலாம்.
மேலே வழங்கப்பட்டிருக்கும் செயலிகளில் ஏதேனும் ஒரு செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நான் கீழே குறிப்பிட்டுள்ள செட்டிங் மாற்றத்தை மேற்கொண்ட பின்னர் போனை ரூட் செய்யுங்கள்.
உங்களது போனில் செட்டிங்-இற்கு சென்று Security என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே Unknown Sources என்று இருப்பதில் டிக்-ஐ செயட்படுத்துங்கள்.
இப்போது தரவிறக்கிய அன்றொஇட் ரூட் செயலி மூலம் உணகளத்து போனை மிக இலகுவாக ரூட் செய்து கொள்ளலாம்.
மேலே வழங்கப்பட்டிருக்கும் அன்றொஇட் ரூட் செயலிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. ஆகவே குறிப்பிட்ட ஒரு செயலி மூலம் உங்களது போனை ரூட் செய்து கொள்ள முடியவில்லை என்றால், மேலே வழங்கப்பட்டிருக்கும் மற்றுமொரு செயலி மூலம் உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்ய முயற்சியுங்கள்.
குறிப்பு
என்னை பொறுத்த வரை ரூட் செய்வதால் பெரிதாக பிரச்சினை ஏதும் வருவதாக தெரியவில்லை. ஏனெனில் நானும் என்னுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்து தான் உபயோகித்து வருகிறேன். இது வரை எந்த பிரச்சினையும் இல்லை. இருந்த போதிலும், உங்களது ஸ்மார்ட் போனின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான்.

