குறிப்பிட்ட ஒரு பேஸ்புக் கணக்கு உண்மையானதா பொய்யானதா என்று தெரிந்து கொள்வது எப்படி?

இணையத்தை உபயோகிக்கும் பலராலும் தினமும் லொகின் செய்யப்படும் ஒரு தலமே பேஸ்புக். உலகம் முழுதும் தனக்கென பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களுக்காக தினம் தோறும் பல்வேறு பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

இது குறித்த பதிவுகள் எமது தளத்திலும் ஏற்கனவே பதியப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்படும் பதிவு

சரி இன்றைய பதிவில் பேஸ்புக் கணக்குகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விடயத்தை பகிர்ந்து கொள்கிறேன்.


பேஸ்புக் உபயோகிக்கும் அனைவருமே எதிர் கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சினை தான் பொய்யான பேஸ்புக் கணக்குகளின் மூலம் ஏமாற்றப்படுவது.

ஆகவே இன்றைய பதிவில் இவ்வாறு பொய்யான பேஸ்புக் கணக்குகளை எப்படி இனம் கண்டு கொள்வது என்று பார்ப்போம். குறித்த ஒரு பேஸ்புக் கணக்கு உண்மையானதா அல்லது பொய்யான ஒரு பேஸ்புக் கணக்கா என்று 100% எம்மால் சரியாக கூற முடியாது. இருந்த போதிலும் குறிப்பிட்ட சில விடயங்களை கருத்திற்கொண்டு குறித்த பேஸ்புக் கணக்கு உண்மையானதா அல்லது பொய்யானதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

குறித்த பேஸ்புக் கணக்கில் இருக்கும் ப்ரோபைல் போட்டோ ஒரிஜினல் தான என்று தெரிந்து கொள்வது எப்படி?

குறிப்பிட்ட ப்ரோபைல் போட்டோவை திறந்து ரைட் கிளிக் செய்து Search google for image என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


இவ்வாறு செய்வதன் மூலம் குறிப்பிட்ட போட்டோ இணையத்தில் இருந்து தரவிறக்கப்பட்டு பதிவேற்றப்பட்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடியும்.


இறுதியாக ப்ரோபைல் போட்டோ பதிவேற்றப்பட்டிருக்கும் திகதி

பொய்யான பேஸ்புக் கணக்குகளை உபயோகிக்கும் பலர் விடும் பொதுவான ஒரு தவறு தான் ஒரே போட்டோவை நீண்ட நாட்களுக்கு ப்ரோபைல் போடோவாக வைத்து இருப்பது.

ப்ரோபைல் போட்டோ அப்டேட் செய்யப்பட்டிருக்கும் திகதியை பரிசீலித்து பார்ப்பதன் மூலம் குறித்த ஒரு பேஸ்புக் கணக்கு உண்மையானதா பொய்யானதா என்ற முடிவுக்கு ஓரளவு வர முடியும்.

அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பிறந்த திகதி.
குறித்த பேஸ்புக் கணக்கில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பிறந்த திகதியை வைத்து கூட குறித்த கணக்கு எந்த அளவுக்கு உண்மையானது என்ற முடிவுக்கு வரலாம்.

பொதுவாக பொய்யான பேஸ்புக் கணக்குகளின் பிறந்த திகதி பிரபல்யமான நாட்களாவே இருக்கும். உதாரணமாக பெப்ரவரி 14, ஜனவரி 1 என்று காணப்படும்.


டைம்லைன் பதிவுகளை வைத்து முடிவு செய்யலாம்.

பொய்யான பேஸ்புக் கணக்குகளில் டைம்லைன் பதிவுகளை வைத்து குறித்த கணக்கு தொடர்பான முடிவுக்கு வரலாம். குறித்த கணக்கு பொய்யான ஒரு பேஸ்புக் கணக்கு என்றால் அந்த டைம்லைன்-இல் பெரும்பாலும் லிங்க்-கள் தான் காணப்படும்.



பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே இந்த விடயங்களை பரிசீலினை செய்து பார்ப்பதன் மூலம் குறித்த ஒரு பேஸ்புக் கணக்கு உண்மையானதா அல்லது பொய்யான ஒரு கணக்கா என்ற முடிவுக்கு வரலாம்.