கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய யு-டியுப் மேஜிக் - பகுதி 2

இன்றைய பதிவில் முன்னைய ஒரு பதிவின் இரண்டாம் பாகத்தை தரலாம் என்று நினைக்கின்றேன். ஏற்கனவே எமது தளத்தில்யு-டியுப்-இல் காணப்படும் மிக முக்கியமான வசதிகளை பட்டியலிட்டு இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு அமைய உள்ளது.

எமது இணைய வாழ்க்கையின் மிக முக்கிய நண்பர்களில் ஒருவரான இந்த யு-டியுப் தமது பயனர்களின் நன்மை கருதி பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே மேலே குறிப்பிட்டது போல, யு-டியுப் சம்மந்தமான வசதிகளை "யு-டியுப் மேஜிக் - பாகம் 1" என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே உள்ள லின்ன்கில் சென்று தெரிந்து கொல்லலாம்.

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய யு-டியுப் மேஜிக் - பகுதி 1

ஆகவே அந்த பதிவின் தொடர்ச்சியாக இன்று யு-டியுப் மேஜிக் பாகம் 2 என்று உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


யு-டியுப் வீடியோ-களை உங்களது ஸ்மார்ட் போனில் Offline ஆக சேமித்து Data உபயோகிக்காமல் பார்ப்பது எப்படி?

இந்த வசதியை உங்களது அன்றொஇட் மற்றும் ஐ-போன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு யு-டியுப் வீடியோவை Offline வீவ் ஆக சேமித்து பின்னர் பார்க்கும் விதமாக அமைத்து கொள்ளலாம்.

இதை செய்ய முதலாவதாக உங்களது ஸ்மார்ட் போனிட்கான புதிய யு-டியுப் பதிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது யு-டியுப் கணக்கிற்கு நுழைந்து அங்கே உங்களது Profile-ஐ கிளிக் செய்து செட்டிங்க்ஸ் சென்றால், யு-டியுப் வீடியோ-களை Offline-இல் பார்ப்பதற்கான வசதி காணப்படும்.


யு-டியுப்-இல் ப்லே ஆகும் வீடியோவின் தரத்தை குறைத்து டேட்டாவை எப்படி சேமிப்பது?

யு-டியுப்-இல் நீங்கள் ப்லே செய்யும் வீடியோவின் தரத்தை பொறுத்தோ உங்களது டேட்டா பாவனை காணப்படும். ஆகவே உங்களது ஸ்மார்ட் போனிலோ அல்லது கணணியிலோ இருந்து யு-டியுப் வீடியோ-களை பார்க்கும் போது அதிகளவான டேட்டா வீணடிக்கப்படுகிறது என்றால், உங்களுக்கு வீடியோ-வின் தரத்தை குறைத்து கொள்ளும் வசதியை தருகிறது யு-டியுப் தளம். ஆகவே வீடியோ-வின் தரத்தை குறைத்து பார்ப்பதால் உங்களது டேட்டா சேமிக்கப்படும்.

இதை செய்ய குறிப்பிட்ட வீடியோ-வின் செட்டிங்-இற்கு சென்று அங்கே Quality என்று இருப்பதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.


யு-டியுப் வீடியோ-களை எப்படி MP3 ஆக மாற்றிக்கொள்வது?

யு-டியுப் தளத்தில் காணப்படும் எமக்கு பிடித்த வீடியோ-களை MP3 வடிவில் எமக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க குறிப்பிட்ட ஆன்லைன் கன்வெர்ட்டர் தளங்கள் எமக்கு உதவுகின்றன.

youtube-mp3

குறிப்பிட்ட யு-டியுப் வீடியோ-வினுடைய URL-ஐ Copy செய்து, அதை மேலே வழங்கப்பட்டிருக்கும் தளத்தில் சென்று Paste செய்து வீடியோ கோப்புகளை ஆக MP3 மாற்றிக்கொள்ள முடியும்.

யு-டியுப் வீடியோ Buffering வேகத்தை அதிகரிப்பது எப்படி?

உங்களது இணைய வேகமானது குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் யு-டியுப்-இல் காணப்படும் கீழ் குறிப்பிட்டுள்ள செட்டிங்-ஐ செயற்படுத்தி கொள்வதன் மூலம் யு-டியுப் வீடியோ ப்லே ஆகும் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கிட்கு செல்லுங்கள்.

youtube_playback

அங்கே I have slow connection என்பதை கிளிக் செய்து சேமித்து கொள்வதன் மூலம் யு-டியுப் வீடியோ-கள் மெதுவாக ப்லே ஆக்குவதை தவிர்த்து கொள்ளலாம்.


யு-டியுப் வீடியோ ஒன்றை சேமித்து வைத்து பிறகு பார்ப்பது எப்படி?

குறிப்பிட்ட ஒரு வீடியோ-வை தெரிவு செய்து அதன் செட்டிங்க்ஸ்-இற்கு செல்லுங்கள். அங்கே Watch Later என்று காணப்படும் வசதியை செயற்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட அந்த வீடியோ-வை உங்களால் பின்னைய நேரம் ஒன்றில் பார்த்து கொள்ள முடியும்.


யு-டியுப்-இல் ஸ்னேக் கேம் விளையாடுவது எப்படி? (கணனி)

உங்களுக்கு யு-டியுப் தளத்தில் வீடியோ-களை பார்த்து பார்த்து போரடித்து விட்டதா? அப்படியானால் சிறிது நேரத்திற்கு யு-டியுப்-இல் ஸ்னேக் கேம் விளையாடுங்கள்.

குறிப்பிட்ட ஒரு வீடியோ ப்லே ஆகி கொண்டிருக்கும் போது அதை நிறுத்தி விட்டு, உங்களது கிபோட்-இல் இடது Arrow கி-யை 3 நொடிகளுக்கு அழுத்திக்கொண்டு இருப்பதன் மூலம் ஸ்னேக் கேம் விளையாடுவதட்கான திரையை பெறலாம்.

இதை நீங்கள் நேரடியாக யு-டியுப் தளத்தில் இருந்து தான் விளையாட முடியும். அத்தோடு யு-டியுப் வீடியோ-வை பார்க்க நீங்கள் உபயோகிக்கும் பிளேயர் ஆனது அப்டேட் செய்யப்பட்ட புதிய பதிப்பாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.