உங்களது பேஸ்புக் ப்ரோபைல்-ஐ இதுவரை யார் யாரெல்லாம் பார்த்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது எப்படி?

பேஸ்புக் உடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவை இன்று உங்களுக்கு தருகிறேன். பேஸ்புக் சமூக வலைத்தலமானது தமது பயனர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தமது பயனர்களுக்கு தங்களுடைய கணக்கின் ப்ரோபைல் படத்திற்கு பதிலாக வீடியோ அல்லது அனிமேஷன் படங்களை உபயோகிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அது சம்மந்தமான பதிவொன்று ஏற்கனவே எமது தளத்தில் எழுதப்பட்டது. அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் அனிமேஷன் ப்ரோபைல் பிக்சர் வசதி

சரி.. இன்றைய பதிவில் எமது பேஸ்புக் ப்ரோபைல்-ஐ யார் யார் எல்லாம் சமீபத்தில் பார்வையிட்டு இருக்கிறார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கூறுகிறேன்.


சாதாரணமாக எமது ப்ரோபில்-ஐ யார் யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வசதியை பேஸ்புக் நிறுவனம் எமக்கு அளித்ததில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு சில செயலிகளை பயன்படுத்தி எமது பேஸ்புக் கணக்கை யார் யாரெல்லாம் பார்வையிட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இன்றைய பதிவில் எமது பேஸ்புக் கணக்கை யாரெல்லாம் பார்த்து சென்றிருக்கிறார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

இதை தெரிந்து கொள்ள கீழே வழங்கப்பட்டிருக்கும் பேஸ் புக் வீவர் உபாயத்தை பயன்படுத்துங்கள்.
முதலாவதாக உங்களது பேஸ்புக் கணக்கிற்கு கணனியில் கூகுள் க்ரோம் மூலம் லொகின் செய்யுங்கள்.

அடுத்து உங்களுடைய பேஸ்புக் ப்ரோபைல்-ஐ திறவுங்கள்.

உங்களது க்ரோம் உலாவியில் கீழே நான் சிவப்பு நிறத்தில் காட்டி இருக்கும் இடத்திற்கு சென்று,


கீழே நான் சிவப்பு நிறத்தில் குறித்து காட்டி இருப்பது போல் https என்பதற்கு முன்னால் view-source: என்று டைப் செய்து உங்கள் கணனியில் Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.


உதாரணமாக உங்களுடைய URL கீழ் காட்டியுள்ளவாறு இருக்க வேண்டும்.


ஆகவே நீங்கள் Enter பட்டன்-ஐ அழுத்தியதும் கீழ் காட்டியுள்ளவாறு ஒரு திரை தோன்றும்.


இந்த திரையில் வைத்து உங்களது கீ போர்ட்-இல் Ctrl மற்றும் F எழுத்தை ஒரேயடியாக அழுத்துங்கள்.

அப்படி செய்யும் போது கீழே காட்டியிருப்பது போல் புதிய தேடல் பெட்டி ஒன்று திறக்கும்.


இந்த பெட்டியிலே நான் கீழே குறிப்பிட்டுள்ளதை டைப் செய்து Enter பட்டன் ஐ அழுத்துங்கள்.

InitialChatFriendsList

இப்போது குறிப்பிட்ட பேஜ்-இல் நாம் டைப் செய்து தேடிய வாசகம் இருக்கும் இடம் தோன்றும்.

கீழே நான் காட்டி இருப்பது போல் அங்கே பல்வேறு இலக்கங்கள் காணப்படும். இவைகள் தான் உங்கள் பேஸ்புக் கணக்கை இறுதியாக பார்த்த நண்பர்களின் பேஸ்புக் ID.


இந்த இலக்கத்தை Copy செய்து உங்களது உலாவியில் பேஸ்புக் URL-இற்கு பின்னால் இந்த இலக்கத்தை Paste செய்து Enter பட்டன் -ஐ அழுத்தும் போது உங்கள் பேஸ்புக் கணக்கை பார்வையிட்ட குறிப்பிட்ட நபருடைய பேஸ்புக்
கணக்கை பார்க்க கூடியதாய் இருக்கும்.

உதாரணமாக https://www.facebook.com/12345657778 என்று URL காணப்பட வேண்டும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இந்த முறையை பயன்படுத்தி உங்களது பேஸ்புக் கணக்கை யார் யாரெல்லாம் கடந்த நாட்களில் பார்வையிட்டு இருக்கிறார்கள் என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.