எமது தளத்தில் ஏற்கனவே தெரியாத இலக்கத்தில் இருந்து எமது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்புக்களை எப்படி ட்ரேஸ் செய்வது என்றும் தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்பவர் பெயரை எப்படி கண்டு பிடிப்பது என்று பதிவுகள் எழுதப்பட்டன.
அவற்றில் தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்பவர் யார் என்பதை கண்டறிய ட்ரூ காலர் எனப்படும் சிறப்பு செயலியை எப்படி செட்டிங்க்ஸ் செய்து சரியாக உபயோகிப்பது என்ற பதிவு பெரிதும் வரவேற்பு பெற்றது.
அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று ட்ரூ காலர் செயலியை உங்களது அன்றொஇட், ஐ போன் மற்றும் விண்டோஸ் போன்களில் எப்படி செட்டிங்க்ஸ் செய்து தெரியாத இலக்கத்தில் இருந்து உங்களது போனிற்கு வரும் அழைப்பு யாருடையது என்று சரியாக தெரிந்து கொள்ளுங்கள்.
தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி?
உலகில் உபயோகிக்கப்படும் 80% ஆனா தொலைபேசி இலக்கங்களை ட்ரூ காலர் செயலி சரியாக கண்டு பிடித்து உங்களுக்கு தெரியாத இலக்கம் ஒன்றிலிருந்து அழைப்பொன்று வரும் போது குறிப்பிட்ட அழைப்பு யாருடைய அழைப்பு என்று காட்டி விடுகின்றது.
சரி.. இதை ட்ரூ காலர் செயலி எப்படி கண்டு பிடிக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
குறிப்பிட்ட ஒருவர் ட்ரூ காலர் செயலியை தனது ஸ்மார்ட் போனில் நிறுவும் போது, குறிப்பிட்ட நபருடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து தொலைபேசி இலக்கங்களும் உரிய பெயர் விபரங்களுடன் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் சேமிக்கப்பட்டு விடும்.
இந்த முறை மூலமே ட்ரூ காலர் எம்முடைய அனைத்து தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கிறது. இந்த செயலியை உலகம் முழுவதும் பல லட்ச்சக்கணக்கான பயனர்கள் உபயோகிப்பதால், அவர்களுடைய டேட்டாபேஸ்-இல் பல மில்லியன் கணக்கான தொலைபேசி இலக்கங்கள் சேமிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆகவே இது ஒரு ஆன்லைன்-இல் நடைபெறும் தனிநபர் தகவல் திருட்டு செயற்பாடு போலவே கருதப்படுகின்றது.
அதனால் உங்களது தனிப்பட்ட தொலைபேசி இலக்கமும் ட்ரூ காலர்
டேட்டாபேஸ்-இல் ஏற்கனவே சேமிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அவர்களுடைய தளத்திற்கு சென்று உங்களது தொலைபேசி இலக்கத்தை வழங்கி தெரிந்து கொள்ள முடியும்.
ட்ரூ காலர் தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆகவே உங்களது தொலைபேசி இலக்கம் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் உங்களது பெயர் விபரங்களுடன் சேமிக்கப்பட்டு இருந்தால் அதை எப்படி அவர்களுடைய டேட்டாபேஸ்-இல் இருந்து நீக்கி கொள்வது என்று பார்ப்போம்.
கீழே வழங்கப்பட்டிருக்கும் ட்ரூ காலர்-இன் அனலிஸ்ட் போன் நம்பர் என்ற தளத்திற்கு செல்லுங்கள்.
இந்த தளத்தில் உங்களது தகவல்களை வழங்கிய பின்னர், உங்களது போன் நம்பரை குறித்த டேட்டாபேஸ்-இல் இருந்து நீக்கி கொள்ள முடியும்.
ட்ரூ காலர் அன்-லிஸ்ட் போன் நம்பர் தளம்
அதிலே உங்களுது இலக்கத்தை பதிவு செய்து, ஏன் ட்ரூ காலர் டேட்டாபேஸ்- இல் இருந்து உங்களது இலக்கத்தை நீக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை தெரிவு செய்த பின்னர்,
Unlist என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் இருந்து உங்களது தொலைபேசி இலக்கத்தை நீக்கி கொள்ள முடியும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே உங்களுடைய தொலைபேசி இலக்கமும் இந்த தளத்தில் சேமிக்கப்பட்டு இருந்தால் நான் மேலே குறிப்பிட்டு உள்ள முறையை பயன்படுத்தி உங்களது தொலைபேசி இலக்கத்தை ஆன்லைன்-இல் இருந்து நீக்கி கொள்ள முடியும்.
Tech in Tamil
Tips and Tricks
ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் திருடி வைக்கப்பட்டிருக்கும் உங்களது தொலைபேசி இலக்கத்தை நீக்குவது எப்படி?

