இன்றைய காலகட்டத்தில் மின்னஞ்சல் முகவரி ஒன்றை உபயோகிக்காதவர்கள் யாருமோ இல்லை என்று கூறலாம். இன்று நாம் இணையத்தில் உபயோகிக்கும் அனைத்து ஆன்லைன் கனன்க்குகளை ஆரம்பிக்க கட்டாயமாக மின்னஞ்சல் முகவரி ஒன்று எமக்கு தேவைப்படுகிறது. ஆகவே இன்று இணையத்தை உபயோகிக்கும் அனைத்து தரப்பினருமே குறைந்தது ஒரு மின்னஞ்சல் முகவரியையாவது பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.
ஆகவே இன்றைய பதிவில் மின்னஞ்சலுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு சுவாரஸ்யமான விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மின்னஞ்சல் சேவைகளில் மிகவும் பிரபல்யமான ஒன்று தான் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவை. பல்வேறு பயனுள்ள வசதிகளை தமது பயனர்களுக்கு வழங்கி வரும் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மற்றைய மின்னஞ்சல் சேவைகளை பார்க்க ஒரு படி மேலே தான் இருந்து கொண்டு இருக்கிறது.
இப்படி இருக்கும் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் காணப்படும் ஒரு சுவாரஸ்யமான விடயம் தான், ஜிமெயில் முகவரிகளில் நீங்கள் உபயோகப்படுத்தும் புள்ளி (.) கணக்கில் எடுத்து கொள்ளபடாமை.
அதாவது உங்களது மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் எழுத்துக்களின் மத்தியில் நீங்கள் புள்ளி (.) ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகலையோ கொண்டு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி இருந்தாலும் உங்களது மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் புள்ளிகள் கணக்கில்கொள்ள பட மாட்டது.
உதாரணமாக உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி tech.in.tha.mil@gmail.com என்று இருக்குமேயானாலும் கூட ஜிமெயில் இதை techinthamil@gmail.com என்றே கருத்திட்கொள்ளும்.
அதாவது உங்களது ஜிமெயில் முகவரியின் மத்தியில் காணப்படும் புள்ளிகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
அதே போன்று நீங்கள் உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை கொண்ட நண்பர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பும் போது அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியும் மத்தியில் எத்தனை புள்ளிகளை வைத்து ஜிமெயில் முகவரியை டைப் செய்து அனுப்பினாலும், குறிப்பிட்ட நண்பருக்கு மின்னஞ்சல் கிடைக்கும்.
உங்களது நண்பருடைய ஜிமெயில் முகவரி myfriend@gmail.com என்று இருக்குமேயானால், நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக எத்தனை புள்ளியை வேண்டுமானாலும் டிபே செய்து அனுப்ப முடியும்.
உதாரணமாக
my.friend@gmail.com அல்லது
my.fri.en.d@gmail.com அல்லது
m.y.f.rie.n.d@gmail.com என்று கூட டைப் செய்து அனுப்ப முடியும். இவ்வாறு நீங்கள் பிழையாக டைப் செய்து அனுப்பும் மின்னஞ்சல் கூட உங்களது நண்பரின் இன்பாக்ஸ்-ஐ சரியாக சென்றடையும்.
குறிப்பு
இது உபாயம் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளில் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tech in Tamil
Gmail
Tech News
உங்களது ஜிமெயில் முகவரியின் மத்தியில் காணப்படும் புள்ளி (.) செல்லுபடியாகாது என்பது உங்களுக்கு தெரியுமா?
